மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும்.
ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும்.
நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்து விடும்.
இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது.
ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது.
நடு நிலையில் நிற்பதே தியானம்...
இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது. அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது.
தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது. கனவைத் தருகிறது. மிகவும் வசீகரமாக இருக்கிறது.
நீங்கள் அந்தக் கோடிக்குப் போய் விட்டால், நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.
மனம் முரண்பாடுகள் நிறைந்தது.
மனம் முழுமையாக இருக்க முடியாது.
யாரையாவது நீங்கள் நேசிக்கும் போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள். நேசித்தல் முழுமையாக இல்லை.
உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம்.
நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.
எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.
மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும்.
எதிரானதற்குச் செல்லாதீர்கள்.
மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள்.
இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.