04/11/2020

இன்றைய உலகச் சூழ்நிலையில் வல்லரசுகளின் இராணுவத் தலையீடு பெருகி வருகிறது...

 


சிறிய தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா? வல்லரசிய எதிர்ப்பிற்கு பெரிய இந்திய நாடு வாய்பபானதில்லையா?

பெரிய இந்தியா வல்லரசுகளின் கூட்டாளியாகி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல் கதவையும் பிடுங்கி எறிந்துவிட்டு வரவேற்புக் கொடுக்கிறது.

ஒரே இடத்தில் - தில்லியில் - மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு இந்தியா முழுவதையும் சூறையாடும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு உள்ளது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு, கொள்கை வழிப்பட்ட தமிழ்த் தேசியமே சிறந்த வடிவம்.

சின்னஞ்சிறு கியூபா, வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவை முறியடித்து கம்பீரமாக உலக அரங்கில் நிற்கின்றன. அவற்றை விட பெரியது தமிழ்த் தேசம்.

தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை வல்லரசிய எதிர்ப்புக்  கொண்டது. தமிழ்த் தேசம் எந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும் ஆற்றல்  பெற்றுள்ளது. இறுதியாக வெல்வது இலட்சிய வழிப்பட்ட மக்கள் சக்தியே.. ஆயுதங்கள் அல்ல..

இந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.