07/12/2020

அதானி குழுமத்தின் 500கோடி ஊழலும் பாஜக மோடி அரசின் சட்ட திருத்தமும்...

 


கார்ப்ரேட்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட பாஜகவின் மோடி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது ராஜவிசுவாசத்தை காட்டுவார்.

அப்படி சமீபத்தில் அதானி குழுமம் செய்த 500கோடி ஊழலிருந்து அந்நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக நாட்டின் சட்டத்தையே மாற்றியமைத்திருக்கிறது பாஜக வின் மோடி அரசு.

குஜராத்தில் அதானி குழுமமும் அரசும் சேர்ந்து அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் எனும் பெயரில் Adani Port and Special Economic Zone (APSEZ) 6456 ஏக்கரில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவி வருகிறது.

இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து அதானி குழுமம் இறக்குமதி செய்து வருகிறது.

அப்படி இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு வரி கட்ட வேண்டும்.

இதனால் அதானி குழுமம் குறைவான அளவான நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்வதாக காட்டி அதிகளவு நிலக்கரியை இறக்குமதி செய்து வந்திருக்கிறது.

இதனால் அரசுக்கு 500கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்று Directorate of Revenue Intelligence (DRI) கண்டுப்பிடித்து இதற்கான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் ஆட்சி பொறுப்புக்கு வந்த மோடி. நாட்டிலேயே மிகப்பெரிய மின்நிலையத்தை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டி நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருபவர்கள் மின்சாரம் தயாரிக்க தேவையான பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவர்கள் வரி கட்டத் தேவையில்லையென்று ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு திருத்தத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் அதானி குழுமம் செய்த வரி ஏய்ப்பு இப்போது சட்டப்படி சரியானதாகி இந்த வழக்கிலிருந்து அதானி குழுமம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த அதானி குழுமம் நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலே மின்சாரத்தை தருகிறதா? என்றால் இல்லையென்பது தான் ஏதார்த்தம்.

இதற்கு உதாரணம் மிக அதிக விலையில் மின்சாரத்தை அதானி குழுமம் விற்கிறது என்பதற்காக 2014லிருந்து இதன் சலுகைகளை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு வழக்கு குஜராதில் நிலுவையில் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு தனியார் முதலாளிகாக அதுவும் பிரதமர் தேர்தலின்போது மோடி பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹெலிகாப்டர்கள் எல்லாம் அதானி கொடுத்தார் என்பதற்காக ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் போய் நவாப் ஷெரிபுடன் அதானிக்காக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்புறம் ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணமாக போனபோது அதானியையும் கூட்டிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவிலுள்ள நிலக்கரி சுரங்கத்தை அதானி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கிக்கொடுத்ததென்று எல்லாம் செய்த மோடி இறுதியாக இந்திய சட்டத்தையே அதானிக்காக மாற்றி எழுதுகிறார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை சேர்ந்த அருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை அவர்கள் இதுகுறித்து பேசவில்லை என்பதிலிருந்தே இவர்கள் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

நாட்டின் வளங்களை முதலாளிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்கும் பாஜகவின் மோடி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தான் நாடு முழுக்க தேசபக்தர்களாக வலம் வருகிறார்களென்றால் இதைவிட அசிங்கம் வேறெதாவது இருக்க முடியுமா?

http://en.southlive.in/business/2016/11/22/when-scores-die-in-streets-without-cash-sbi-gives-dollar1-billion-for-adanis-australia-project

http://in.reuters.com/article/tata-power-adani-power-court-idINKBN17D0MF

http://www.epw.in/journal/2017/24/web-exclusives/modi-governments-%E2%82%B9500-crore-bonanza-adani-group-company.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.