25/12/2020

குதிரை சிலையின் மறைபொருள்...

 


நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.

குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..

அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை,  இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.