23/12/2020

தலித்தியம் என்ற சாத்தான்...

 


தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும்.

ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்ப்வாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும்.

சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.

அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும்.

இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.

தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?

தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.

திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும்.

அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும்.

திராவிட அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.

பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.

மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும்,

ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும்.

இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள்.

இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.