05/01/2021

திராவிடன் என்று சொல்வது.. தமிழனுக்கு மானக்கேடு...

 


தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர்.

விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாய் இருந்தது.

அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தான் என வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர்.

தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர்.

விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான்.

விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடு தான்..

அன்று மட்டுமே 10 லட்சம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்..

அது இன்று வரை தொடர்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.