ஏனென்றால் அது ஒன்றுதான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது.
நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.
யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.
உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.
இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.
உன் தனித்தன்மையை மதி.
பிறர் தனித்தன்மையையும் மதி.
எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.
அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.
அப்போதே நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலர முடியும்.
மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.
மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....
சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு,
சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,
ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள் - அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,
மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.
நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.
உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.
அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.
உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.
யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.
தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.
எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.
ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.
மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.
மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.