அதிசய மர்ம உலோக கோளங்கள்...
சில நூற்றாண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்தில் 2.8 மில்லியன் ஆண்டு பழமையான கற்பாறைகள் கிடைத்தன.
அவற்றில் இரண்டு ஒரு இஞ்சு விட்ட அளவு உள்ள அபூர்வ உலோக கோளங்கள் (உருண்டைகள்) கிடைத்தன.
ஒன்று நீல நிற உலோகத்தாலானது. இவற்றின் வெளிப்புரத்தில் நடுவில் குறுக்கு கோடு சரி சமமாக பிரிக்கப்பட்டு இருந்த்து. இணையான மூன்று சிறு துளைகள் போடப்பட்டு இருந்தன.
இன்னொரு கோளம் உள்ளீடு அற்றது (காலியான) இதனுள் பஞ்சு போன்ற பொருள் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தது.
எதற்காக யார் இவற்றை உருவாக்கினார்கள் என்ற மர்மம் இன்றுவரை துளங்க வில்லை.
அதிசய கற்பாறை உருண்டைகள்...
1930 ல் கோஸ்டாரிக்காவின் காட்டு பகுதியில் வாழைத்தோட்டம் அமைப்பதற்காக நிலம் சுத்தப்படுத்தப்பட்டது.
அந்த இடத்தில் டஜன் கணக்கிலான சிறிதும் பெரிதுமான கற்கோள உருண்டைகள் கிடைத்தன.
சிறியது டென்னிஸ் பந்து அளவிலும் பெரியது 16 டன் எடையுடன் 8 அடி விட்டத்துடன் இருந்தன.
மிக துள்ளியமான உருண்டைவடிவில் இது இயற்கையாக உருவாக வாய்ப்பு இல்லை மனிதன் உருவாக்கி இருந்தால் எப்படி உருவாக்கி இருக்க முடியும்..
எதற்காக? யார் ? இதை உருவாக்கினார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.