இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றை வரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்...தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.