நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய் விடுகின்றது – ஏன் ?
உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை. நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை – இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்.
நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது – அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது – அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் – சுறுசுறுப்பும், தெம்பும், உற்சாகமும் கிடைத்து விடுகின்றது.
இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும், தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து – அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து, உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம், ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்.
ஞானிகள் தங்கள் சாதனையில், மனதை – மூளையை அமைதி – ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி.
அதனால் நாமும், அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம், தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.
இது எப்படி இருக்கிறது என்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தியை குறைப்பது போல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
புறத்திலுள்ள சூரியன் – ஆன்ம சூரியன் ஆகும்...
2. கோவில் கருவறை அமைப்பு..
தமிழ் நாட்டில், அனேகமாக எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் – மூலவர் – ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார்.
அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில்..
ஆயிரங்கால் மண்டபம் – மூளை
மூலவர் – ஆன்மா..
மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது.
3. நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய, இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம், ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து, மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் – இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.