06/02/2021

எதற்கு டென்ஷன்...

 


ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது.

ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான்.

750 தசைகளை அசைக்கிறான்.

70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான்.

இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை..

ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன..

இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை.

நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்?

இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம்.

இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே கருதுகிறான்.

இயல்பாக, மனிதன் மகிழ்ச்சியாக செய்யும் எந்தச் செயலும் அவனுக்கு களைப்பையும், டென்ஷனையும் தருவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இயற்கை தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறது.

ஆனால் மனிதன் செய்கின்ற பல செயல்கள் பயன் தராதவையாகவும், தேவையில்லாதவையாகவும் இருக்கின்றன.

அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இல்லை.

இயற்கையின் வழி முறைகளைப் பின்பற்றினால், நோ டென்ஷன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.