பாப்பாத்தி என்ற பட்டம் பறையர் பெண்களைத் தான் குறிக்கும் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார்...
அவருக்கு நட்புரீதியான என் பதில்..
தமிழர் மண்ணான பெங்களூரில் சொக்கப் பெருமாள் ஆலயம் தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது..
தமிழ் கல்வெட்டுகள் பல உள்ள இக்கோவிலில் 1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று உள்ளது..
இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம் பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது..
(சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )
பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பாத்தி, பார்ப்பனத்தி போன்றவை சோழர்கள் காலத்தில்கூட ஒரு சாதியைக் குறிக்கவில்லை.
சங்ககால இலக்கியங்களில் இத்தகைய பெயர்கள் தொழிலைக் குறிக்கவே பயன்பட்டன..
சோழர் காலம் வரை அதுவே நடைமுறை..
அதாவது யார் வேண்டுமானாலும் பார்ப்பனர் ஆகலாம்..
தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலேயே பிராமணீயமும் சாதியமும் நடைமுறைப் படுத்தப்பட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.