22/03/2021

களப்பிரர்கள் வரலாற்றில் மறைந்து வாழ்ந்ததின் மர்மம் என்ன.?

 


ஏற்கனவே சொன்ன களப்பிரர்கள் ஆட்சியில் எந்த புலவர்களும் இவர்களை புகழ்ந்து பாடவும் இல்லை எழுதவும் இல்லை..

அசோகர் காலத்திலையே கல்தூண்களை வைத்து வீரத்தை நிரூபித்தார் அசோகர்..

அப்படி பார்க்கப்போனால் அசோகருக்கும் இவர்களும் சில நூற்றாண்டு வித்யாசங்கள் உண்டு, அப்படி இருக்கையில் ஏனோ களப்பிரர்கள் செய்ய தவறியது பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

சரி களப்பிரர்கள் காலத்தில் தோற்றுப் போன சேர சோழ பாண்டியர்களின் நிலை என்ன அவர்கள் களப்பிரர்களால் ஒடுக்கப்பட்டு செய்வதியாமல் இருந்துளார்களோ என்று அந்தப்பக்கம் யோசித்தால்.

பெரிய திருப்பமாக பாண்டியர்களின் ஒருவர் இலங்கையில் சில இடங்களை வென்று அங்கே ஆட்சி அமைத்ததாக தெரிகிறது.

சோழர்களும் இரேணாட்டில் ஆட்சி அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அப்படியாயின் சேர சோழ பாண்டிய மன்னர்கள் வலிமையிழந்து விடவில்லை..

அப்படியாயின் எதனால் களப்பிரர்களின் பக்கம் இவர்கள் சீண்டவே இல்லை இது தான் கேள்விக்குறி ?

இதற்கு காரணம் மறு  உலகப்பயணம் ?

அதாவது பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிராவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கூற்றுப்படி...

அறநெறியை வலியுறுத்தி பிறவா நெறியான அதாவது இறப்பு பிறப்பு இல்லாத நிரந்தர மறு உலக வாழ்வுக்கு இவர்கள் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது..

அதெல்லாம் இல்லையென்று வாதிட்டால், வேறு என்ன காரணத்தையும் எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை..

இந்த காலகட்டத்தில் தான் புத்த மதமும் உருவாக்கிக்கொண்டு இருக்கும் நேரம் அவைகளும் மறு உலக வாழ்க்கை ஒன்றுள்ளது அதன் காரணியாகத்தான் இந்த உலக இன்பங்களை ஒதுக்கி துறவறம் மேற்கொண்டு மறு உலக வாழ்க்கைக்காக தம்மை தயார் படுத்தி கொள்ளல் வேண்டும்.. என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது..

அதன் காரணமாக தமிழக பகுதிகளில் விகாரைகள் எழும்ப தொடங்கின..

ஆனால் இந்த களப்பிரர்கள் இதனை ஆதரிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை காரணம் இவர்கள் ஆதரித்தால் இன்றைய புத்தமத வரலாற்றில் களப்பிரர்கள் பற்றிய செய்தி வந்து இருக்கும் ஆனால் வரவில்லை..

ஆகவே இவர்கள் துறவறத்தை ஆதரிக்கவில்லை அதேசமயம் மறு உலக வாழ்க்கை என்பதை ஆணித்தரமாக நம்பி இருக்கின்றனர்.

அதனால் தான் இவர்கள் ஒரு பாரம்பர்ய தொன்மையான தமிழகத்தை ஆண்ட பொழுது கூட நாங்கள் அரசர்கள் என்ற சின்ன கர்வம் கூட இல்லாமல் எந்த கல்வெட்டையும் செதுக்காமல் எந்த கட்டிடத்தையும் கட்டாமல் சிறந்த ஆட்சி செய்து விட்டு..

இன்று வரலாற்றில் நாங்கள் யார் என்றே தெரியாமல் மறைந்து வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர்..

இவர்களது கூற்றை மக்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் ஆதரவு அளித்ததால் தான் சேர சோழ பாண்டியன் கூட இவர்களை நெருங்க விடாமல் தடுத்துள்ளது..

ஆதாரம் நூட்கள் : களப்பிரர்கள் காலத்தில் தமிழகம்.

ஆசிரியர் : மயிலை சீனி வெங்கடசாமி.

இரண்டாவது ஆதாரநூல் : வேதமும் சைவமும்.

ஆசிரியர் :சு கோதண்ட ராமன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.