அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி .
வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி .
அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய முந்திரிப்பருப்பு .
போலீஸ்காரர் : தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போரானா?
பெண்மணி : ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன்..
போலீஸ்காரர் : அப்போ நமக்கு வெயூட்டா வாங்கலாம்... நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?
பெண்மணி : தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது..
போலீஸ்காரர் : கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் .
உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா.?
பெண்மணி : ரொம்ப பிடிக்கும்.. ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன்..
கேட்டதும் மயங்கி விழுந்தார் போலீஸ்காரர்.. இன்னும் எழுந்திரிக்கலையாம்...
😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.