02/03/2021

சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்...


மேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள்.

நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர்.

இன்று மொத்த நாடே நாசமாய் போனது.

கையூட்டு (லஞ்சம்)  வாங்கியவர்களின் சந்ததி உட்பட.

சோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது.

இரண்டாவதாக அந்நாட்டை விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை  குத்தப்பட்டு,  அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி அனுக்கழிவு, மருத்துவக்கழிவுகளை கொட்டி கடல்வளத்தையும் அழித்தார்கள்.

ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத் தானே மாற முடியும்...

அதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும்,  வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான்.

நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது. 

சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்...

இன்றைய கார்ப்ரேட் அமெரிக்க,  இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு.

கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு.

தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன,  செத்தாலென்ன என்ற மோடியின் மனநிலையாக இருக்கலாம்.

கிளின் இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது.

சென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம்.

இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு,  தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும்.

தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ?

அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.