02/03/2021

ஊசல் என்னும் ஊசலாட்டம்...

 


பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்...

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்

பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.

முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.