இயந்திரக் கோளாறில் சிக்கிய ஹெலிகாப்டரிலிருந்து கயிற்றில் பதினோரு பேர் தொங்கிக் கொண்டிருந்தனர்...
பத்து ஆண்கள்... ஒரே ஒரு பெண்...
அத்தனை போரையும் கயிறுதாங்காது...
யாராவது ஒருவர் கையை விட்டு கீழே விழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது..
யார் அந்த ஒருவர் என்பது தான் பிரச்சினை..
விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பெண் பேசத் தொடங்கினாள்...
நான் கயிற்றிலிருந்து குதிக்கப் போகிறேன். பெண்ணின் பிறப்பே தியாகத்தில் தான் முழுமை பெறுகிறது.
கணவனுக்காக, குழந்தைகளுக்காக,... ஏன்?
மற்றவர்களுக்காக விட்டுத் தருபவளே பெண்.
பலனை எதிர் பாராமல் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே பெண்ணின் பெருமை..
பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை அந்த பத்துப் பேரிடமிருந்தும்.
அடப்பாவிகளா, உணர்ச்சி வசப்பட்டு, உயிர விட்டுட்டீங்களேடா..?
இப்படி தான் நம்ம ஆளூங்க பெண்ணின் பேச்சை நம்பி ஏமாந்து போறான்...
😒😒😒
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.