11/03/2021

திராவிடத் திருடர்களே பதில் சொல்லுங்கள்...

தமிழர்கள் மத ரீதியா கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.. ஏன் இஸ்லாமாக இருக்கிறார்கள்.. அதையெல்லாம் சுலபமாக மறந்துவிட்டு.. இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் மீதுதான் பெரியாரின் கவனம் திரும்பியது.. காரணம் என்ன..?

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தமிழர்களிடையேயும் சாதிப் பிரிவுகள் உண்டு. இல்லை எங்கிறீர்களா.. அப்படி பார்க்கின்ற போது.. இந்து என்பதை மட்டும் நோக்கித் தாக்குவது ஏன்..?

உண்மையான தமிழ் சமூக அக்கறை உள்ளவரா பெரியார் என்ற ஈ வெ ராமசாமி நாயக்கர் இருந்திருந்தால் திராவிட வாதத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்களின் தேசிய வாதத்தை இந்திய தேசியத்துக்கு முன்னால் நிலை நிறுத்தி இருக்க வேண்டும்.

மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாடு.. தமிழராட்சி என்பவற்றை முன்மொழிந்த போது அதை நீங்கள் கூறும் தமிழர்கள் மீது அக்கறையிருந்த பெரியார் ஏன் ஆதரித்து நிற்கவில்லை..?

மதங்களை இனக்கோட்பாட்டுக்குள் கலப்படம் செய்யாதீர்கள். மதங்கள் மனிதனுடைய நாகரிக வளர்ச்சியின் ஒரு காலத்தில் ஆதிக்கம் செய்தவைதான். இன்று அந்த நிலை உலகெங்கும் அருகி.. அறிவியல் தான் ஆதிக்கம் செய்கிறது. இதற்காக யாரும் மதங்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிக் கொண்டு திரியவில்லை.

அறிவியல் மூலம் மக்களின் கேள்விகளுக்கு பதிலிறுக்கின்ற போது மதங்கள் காட்டும் மூட நம்பிக்கைகள் இனங்காணப்பட்டு கைவிடப்பட சமூகத்துக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்கள் நிலைத்துவிடுகின்றன.

இந்துமதமும் அதற்கு விதிவிலக்கல்ல. முன்னொரு காலத்தில் வைணவம் சைவம் என்று அடிபட்டவர்கள் இன்று அந்த நிலையிலின்றும் மாறுபட்டு இல்லையா..?

கருத்தியல் உலகும் அறிவியல் உலகும் மனிதப் பரினாம வளர்ச்சியோடு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மனிதனின் கருத்துருவாக்கதால் உருவான மதமும் அதன் நிலைகளை மாற்றிக் கொள்ளும்.

எனவே அடிப்படையில் கல்வி மற்றும் அறிவியல் அறிவுதான் மக்களுக்கு அவசியம்.

இனம் என்ற அடையாளப்படுத்தலுக்கு திராவிடம் என்ற போர்வை தமிழர்களுக்கு அவசியமில்லை.

தமிழர்களுக்கு என்று தனித்துவமான பாரம்பரிய கலாசாரம் நிலம் மொழி பண்பாடு என்று இனத்துவ அம்சங்கள் உள்ளன.

அவற்றை திராவிடத்துக்கு வெளியில் நின்று நாம் இனங்காண்பதும்.. அதைக் கொண்டு தமிழினத்தின் தேசிய இருப்பை பாதுகாப்பதும் அவசியமாகும். அதற்கு திராவிடம் தடையாகவே இருக்கிறது. இருக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை.!

காரணம் தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்தி சொத்து சேர்க்கனுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.