11/03/2021

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்...

 


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.

இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றில் வித்தியாசம் -  உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு -  வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.

ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.