23/04/2021

மறுபிறப்பு...

 


தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட

திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை பற்றி குறிப்பிடும் போது...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்று.

இறப்பை உறங்குவது போலும் என்றும்.

பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.

அப்படிப் பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும் தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத் தானே பொருள்...

ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத் தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?

அதை மறுபிறவி என்று சொல்லலாமா?

எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது, இதுவரை பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு போன்றது தான் என்பது என் கருத்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.