04/04/2021

திராவிடம் என்பது மாயையான ஒன்று...

 


ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள் தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.