12/04/2021

மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?

மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..

முழுமையாக தெலுங்கர்கள்  ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.

தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.

அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.

ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.

இவர்தான் ’தமிழர் தலைவரா?

தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.