07/05/2021

பிரம்மத்தை நோக்கி - 5...



இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே பிரபஞ்ச பொது இயல்பாகவும் இருக்கிறது. இச்சமநிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவான நோக்கு.

ஏனெனில் இந்த பயணம் அங்கிருந்தே துவங்கியது. ஒவ்வொரு பொருளும் தனது மூல இருப்பை நோக்கி இன்பமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் கலைந்து செல்கிறது.

பொருள் நிலை என்பது எல்லைக்கு உட்பட்ட தனித்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையுடையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி நகர்ந்து செல்வதே ஆனந்தமானது.

எனவே தான் நாம் உருவாக்கி வைத்த கோயில்கள் கட்டிடங்கள் பொருட்கள் எல்லாம் படிப்படியாக சிதைந்து தனது மூல இருப்பை நோக்கி ஆனந்தமாக நகர்கின்றன.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுமே தனித்தனி பொருள் தான். உயிரற்ற பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்..

உயிரற்ற பொருள் இயற்பியல் வேதியியல் வினைகளின் விதிப்படி நடந்துகொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. இவை எந்த தடையுமின்றி தன் மூலநிலைக்கு இயல்பாக நகர்ந்து சென்று விடும்.

ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி இயல்பாக மூலத்தை அடைய முடியாமல் தடுப்பது அதன் அறிவுதான். ஆம் அறிவு அதனை மூலத்தை நோக்கி அழைத்து செல்வதாக தவறாக நினைத்து கொண்டு அடுத்த பரிணாமத்திற்கு இட்டு சென்றுவிடுகிறது.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அவைகள் தத்தம் ஆனந்தமயமான மூலத்தை அடையட்டும். உங்கள் அறிவால் அவற்றை கொடுமைப்படுத்தாதீர். அறிவு ஜடப்பொருளுக்குள் புகுந்த நோக்கமே அவைகளை பிரம்மத்தை அடைய வைக்கவே.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.