07/05/2021

சிலந்தி உண்மைகள்...

 


சிலந்தி தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது.

சிலந்தி தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து செண்டு நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.

சிலந்தி தான் பின்னிய வலையையே மறுசுழற்சி செய்ய உண்ணும்.

ஒரே எடையிலான சிலந்தி வலை மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், சிலந்தி பின்னும் வலை தான் இரும்பை விட வலுமையானது.

சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடைசியாக சிலந்தி கடித்து மரணம் அடைந்த சம்பவம் கடந்த 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.

சிலந்திகளுக்கு ஆணுறுப்பு (Penis) இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.

கருப்பு பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டவுடன், ஆண் சிலந்தியை உண்டு விடுமாம்.

இதிலிருந்து தப்பிக்க கருப்பு ஆண் சிலந்திகள், கருப்பு பெண் சிலந்திகளின் பசியை மோப்பம் பிடித்து தப்பித்துக் கொள்ளுமாம்.

சிலந்திகள், நண்டு மற்றும் நத்தைகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள hemocyanin எனும் காப்பர்.

இதுவரை கண்டறியப்பட்ட 46,000 சிலந்தி வகைகளில். ஒன்றே ஒன்று மட்டும் தான் தாவரங்களை உண்டு வாழும் வகையை சேர்ந்தது ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.