31/07/2021

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு...

 




தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அவற்றைத் தெரிந்து கொள்வோம்..

அ __எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று


மே -----> மேன்மை, மேல்


மை -----> அஞ்சனம், கண்மை, இருள்


மோ -----> முகர்தல், மோதல்


யா -----> அகலம், மரம்


வா -----> அழைத்தல்


வீ -----> பறவை, பூ, அழகு


வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த


இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்...

திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...


 

முற்போக்கு, திராவிட , தலித்திய, கம்யூனிச முகமூடிகளே...

 


உங்களுக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதானானால்..

நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைத் தானே திருத்த வேண்டும் ...

அப்படி அரசியல் சட்டத்தை திருத்த இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை.?

உங்களால் அது முடியாது..

ஏனெனில் அது இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்ற சொத்தை காரணத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் .

சட்டத்தை மாற்றினால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும்...

பாஜக பிராடு கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


உன்னை நினைத்து...

 




மனதோடு அழுகிறேன்
உன்னை நினைத்து...

வாய்விட்டு சிரித்தால்
நோய் விட்டுபோகும்...

வாய்விட்டு அழுதால்
நீ என்னைவிட்டு
சென்றுவிடுவாள்...

அதனால் தான்...
நான்...

மண்ணோடு 
இருக்கு வரை...

விண்ணோடு 
போகும் வரை...

நான் மனதோடு 
அழுகின்றேன்...

உன்னை நினைத்து...

ஏத்துனதே அவன் தான்டா வெண்ண 😶

 


தமிழர்களின் பெருமையை தாங்க முடியாமல் கதறும் துக்ளக் 😂

 


தமிழா விழித்தெழு...

 




கம்மநாயுடு சங்கம்,
ரெட்டி மகாஜன சங்கம்,
நாயக்கர் சங்கம்,
பலிஜாநாயுடு சங்கம்,
24மனை தெலுங்குச் செட்டியார்கள் சங்கம் என்று..

தெலுங்கர்களில் இருக்கக்கூடிய அனைத்து சாதிச் சங்கங்களும் தனிதனியாக தங்களது சாதிச் சங்க மாநாடுகளை நடத்துகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டு தெலுங்குமகா ஜன சங்கம் என்ற பெயரில் எல்லா தெலுங்கு சாதிகளும் கூட்டுச் செர்ந்து மாநாடு நடத்தி தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கி விடுகின்றனர்.

இந்தச் சங்கங்களின் பிரதி நிதிகள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேசிய, திராவிடக் கட்சிகளில் தலைமை ஏற்று தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களைப் பற்றி எந்த

தேசியக் கட்சியாவது,


இடதுசாரிக் கட்சியாவது


திராவிடக் கட்சிகயாவது


தலித்தென்று சொல்லிக் கொள்கின்ற கட்சியாவது..


அல்லது தமிழர் கட்சி என்று சொல்லி தமிழர் கட்சியை மட்டும் சாதீ கட்சி என்று சொல்லும் கட்சியாவது  இவர்களை சாதிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுவது இல்லையே ஏன்?

கிருத்துவ மத கைகூலி திமுக...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


சாமானிய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் பாஜக மோடி...

 


பிராடு பாஜக மோடியின் எம்ய்ஸ் மருத்துவமனை ஊழல்....

 


என் வாழ்க்கை பயணம்...

 




போதை பொருளுக்கு அடிமையான
என் நண்பனை மறக்க சொன்னேன்...

பழகிவிட்டேன் முடியவில்லை
என்றான்...

நானும் அடிமையானேன்...

உன் காதல் என்னும்
போதைக்கு...

வெளிவர தெரியவில்லை...

முயற்சித்தும் முடியவில்லை...

முள்ளின் மீது பயணமாக...

என் வாழ்க்கை செல்கிறது...

உன்னை நினைத்து...

மீண்டும் எனக்கு ஆப்பு வைத்த கடவுள்...

 


கசகசா மருத்துவக் குணங்கள்...

 


கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்..

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை  எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்...

கொலைக்கார ஸ்டெர்லைட் ஆலையமும்.. அப்பாவி மக்களும்...

 


30/07/2021

திமுக தெலுங்கர் கட்சிக்கு ஒரு கேள்வி...

 


1924 ம் ஆண்டு ஏற்பட்ட காவிரி ஒப்பந்தத்தை 50 ஆண்டுகள் முடிந்ததும் புதுப்பிக்கும் நேரம்..

தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருந்தது..

சுயநலம் அரசியல் காரணமாக அதை வாபஸ் வாங்கியதற்கு இன்று வரை விளக்கம் உண்டா  திருக்குவளை தீய சக்திகளே ..

வந்து இருக்கும் வினையே உங்களால் விதைக்கப்பட்ட விஷ வித்துக்களாலேயே...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...

 


72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...

பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....

பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.

ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.

ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.

பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.

இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.

எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை  திருமணம் செய்துக் கொண்டார்...

என்னை மறந்து போனவளே...

 




நான் உன்னோடு கைபேசியில்
தொடர்பு கொள்ளும் போது...

அணைத்து விடுகிறேன் என்பாய்...

நான் பேசு என்பேன்...

சிலநேரத்தில் நான்
அனைத்து விடுகிறேன் என்பேன்...

வேண்டாம் பேசு என்பாய்...

இன்று நீயும் நானும்
பேசி கொள்கிறோம்...

நீ உன் மழலையோடும்...

நான் உன் நினைவுகளோடும்....

ஆண்களை அடிப்பதில் இந்திய பெண்களுக்கு மூன்றாவது இடம்...


 

அங்கீட்டு போவீயா...

 


விமரிசனம்...

 


விமரிசனங்கள் பல வகையானவை. அவற்றை எப்படி எதிர்கொள்வது?

காகித அம்பு: சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி, மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.

கால்பந்து: சில விமரிசனங்கள், விளையாட்டாக, உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.

கண்ணாடி: சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

கத்தி: சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும். நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பது போல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள். விலகி விடுங்கள்...

துரோகி எனும் காதலியே உனக்கு நன்றி...

 




உன்னையும் உன் காதலையும்
நான் நேசிக்காமல் இருந்திருந்தால்...

காதலின் சோகங்களையும்
சந்தோசத்தையும்...

நான் அறிந்திருக்க மாட்டேன்...

காதலின் சுவை என்னவென்று
அறியாமலே ...

என் ஆயுள் முடிந்திருக்கும்...

இன்று நீ என்னோடு இல்லை என்றாலும்...

என்னுடைய நினைவுகள் எல்லாம்
உன்னையே சுற்றுகிறது...

காதலை எனக்கு காட்டிய
துரோகி எனும் காதலியே...

உனக்கு நன்றி....

நீதிபதிகள் கலாட்டா...

 


ஆண் Vs பெண்...

 


ஆண் - ஐ லவ் யூ...

பெண் - ஹா ஹா ஹா..

ஆண் - நீ இல்லாமல் நான் இருக்க முடியாது..

பெண் - ஹா ஹா ஹா..

ஆண் - நான் உனக்காக சாக கூட தயார்..

பெண் - ஹா ஹா ஹா..

ஆண் - நான் உனக்கு வைரம் பதித்த தங்க மோதிரம் வாங்கி தரட்டுமா?

பெண் - நெஜமாவா..

ஆண் - ஹா ஹா ஹா..! ஹா ஹா ஹா..

அடுத்தவன் பொண்டாட்டிக்கு நான் ஏன் வாங்கி தரனும்... அஸ்கு புஸ்கு...

😁😁😁

பாஜக மோடி கலாட்டா...

 


கல்நெஞ்சக்காரியே...

 




உயிருக்கு உயிராக நேசித்தேன் ...

நேசித்த என்னிடம் கேட்டாய்...

தந்துவிட்டேன் என் காதலை...

நானே கட்டிக்கொண்டு இருக்கிறேன் ...

என் கல்லறையை...

உன் இதயத்தை தருவாயா...?

கல் ஒன்று குறைகிறது...

இதயமில்லாதவளே...

பிரபஞ்சத்திலே மிகப் பெரிய பிராடு, துரோகி கடவுள் தான்...

 


நல்லவர்களை மட்டும் தான் சோதிப்பான்.. சோதிப்பான்... சோதிச்சே சாகடிப்பான்... கடைசி வரை நிம்மதி தர மாட்டான்...

ஆனால் கெட்டவங்களுக்கு மேலும் மேலும் வாரி கொடுத்து சந்தோசப் படுத்துவான்... திருட்டு பய...

கெட்டவனுக்கு வாரி வாரி கொடுப்பான் ஆனா கடைசியில கை விட்டுவிடுவான் சொல்வாங்க நம்பாதீங்க... 

கெட்டவன் நல்லா வாழ்ந்துட்டு தான் சாவான்...

ஆனா நல்லவனுக்கு மட்டும் தான் சோதனை கொடுப்பான் விளையாடுவான்...

ஏன்னா நல்லவன் தான் முழு மனதோடு கடவுளை வேண்டுவான்.. உனக்கு எல்லாம் கொடுத்துட்டா அப்புறம் யார் கடவுளை வேண்டுறது...

கடவுள் என்பவன் திருட்டு பய... சுயநலவாதி.. துரோகி...

கடவுளை நம்பாதே... நம்பி நடுத் தெருவில் நிற்காதே...

அனாதை பணம் 50,000 கோடி...

 


மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?

 


மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..

முழுமையாக தெலுங்கர்கள்  ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.

தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.

அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.

ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.

இவர்தான் ’தமிழர் தலைவரா?

தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா...

உ.பி பாஜக யோகி ஆட்சியின் லட்சணம்...


 

29/07/2021

போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்...

 




இந்திரா காந்தி இறந்த போது 
25 தமிழர்கள் தற்கொலை...

எம்.ஜி.ஆர். இறந்த போது 
26 தமிழர்கள் தற்கொலை..

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது
48 தமிழர்கள் தற்கொலை..

ஜெயா கைது செய்யப்பட்ட போது 
100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..

இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..

ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...

நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...

அண்ணே நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே...

 




கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்.

சரி சொல்லுங்க..

இது என்னோட  காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்.

என்னது படிச்சீங்களா?

சரி +2   க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு  புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா.

அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே.

டேய்! மூடிகிட்டு கதையை கேளு.

சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா.

புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?

இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி.

என்ன ஆச்சு..?

புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க.

அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க.

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா நான் எப்பிடி பாஸ் ஆகுறது.

ஐயோ பாவம்..

கஷ்டம் தான்..

ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க..

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா  திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா!  பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு!  அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர்  குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர்  ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

 "நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா  இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."

பாஜக மோடி அரசிற்கு செருப்படி கொடுத்த நீதிபதி...

 


பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


பக்குவம்...

 


ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை. 

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அது தான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை. அவர் காயப்படுத்துவதும் இல்லை. தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. 

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...

என்னை மறந்து விடு என்று சென்றாய்...

 




உயிராக நேசித்த என்னை
மறந்துவிடு என்றாய்...

வார்த்தையை கேட்ட நான்
புன்னகை பூத்தேன்...

உனக்கும் சம்மதமா என்று 
புன்னகையுடன் சென்று...

வேறொருவன் கைபிடித்து 
ஒரு தாயாக இன்று நீ...

ஆனால் நானோ...

கண்ணுக்குள் உன்னை
வைத்து இருக்கிறேன்...

உன் பிரிவால் 
கண்கள் அழுவதால்...

கண்ணுக்குள் இருக்கும் 
நீ கலங்கிவிடகூடாது என்று...

புன்னகை பூத்தேன் என்பதை 
நீ உணரபோவது எப்போது...

திருட்டு திமுக கலாட்டா...

 


காலை வணக்கம் மக்களே...

 


திருட்டு திமுக Vs திருட்டு அதிமுக கலாட்டா...

 


கணவன் vs மனைவி...

 


தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம்...


01. துணைவி

 02. கடகி 

03, கண்ணாட்டி

04. கற்பாள் 

05. காந்தை

06. வீட்டுக்காரி

07. கிருகம்

08. கிழத்தி

09. குடும்பினி

10. பெருமாட்டி

11. பாரியாள்

12. பொருளாள்

13. இல்லத்தரசி,

14. மனையுறுமகள்

15. வதுகை

16. வாழ்க்கை

17. வேட்டாள் 

18. விருந்தனை 

19. உல்லி

20. சானி

21. சீமாட்டி

22. சூரியை

23. சையோகை

24. தம்பிராட்டி

25. தம்மேய் 

26. தலைமகள்

27. தாட்டி

28. தாரம் 

29. மனைவி

30. நாச்சி

31. பரவை

32. பெண்டு 

33. இல்லாள்

34. மணவாளி 

35. மணவாட்டி

36. பத்தினி 

37. கோமகள்

38. தலைவி 

39. அன்பி

40. இயமானி

41. தலைமகள்

42. ஆட்டி

43. அகமுடையாள்

44. ஆம்படையாள் 

45. நாயகி

46. பெண்டாட்டி

47. மணவாட்டி 

48. ஊழ்த்துணை

49. மனைத்தக்காள்

50. வதூ 

51. விருத்தனை

52. இல்

53. காந்தை

54. பாரியை

55. மகடூஉ

56. மனைக்கிழத்தி

57. குலி

58. வல்லபி

59. வனிதை

60. வீட்டாள்

61. ஆயந்தி

62. ஊடை

இப்போது புரிகிறதா, இந்த  62 அவதாரங்களை ஒரு அப்பாவி கணவர்  சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று 😁

போலி வரலாறுகளை உருவாக்க தெலுங்கர்களை நியமித்துக் கொண்டிருக்கு திமுக தெலுங்கர் ஸ்டாலின்...



உலகத்தை உருவாக்கியதே கலைஞர் னு வந்தா கூடம் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை...

முருகு என்னும் நுட்பத்தை குறிக்ககூடியது...

 


மனித நினைவுகளை (சிந்தனைகளை) கட்டுபடுத்தகூடியதும் நினைவுகளாகவே மாறுதலும் இதுவே இந்த நுட்பத்தின் மறைப்பொருள்.

சிந்தனை அல்லது நினைவுகளின் பிறப்பிடமான 6 புலன்களையும் கட்டுபடுத்துவது.

உங்கள் சிந்தனை இப்போது எதை நோக்கியுள்ளது?

நீங்கள் எதற்காக எதை நோக்கி பயணித்து கொண்டுள்ளீர்கள்?

உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவிட தயாராக இருக்கிறீர்கள்?

பணமா?அறிவியலா? வளர்ச்சியா?மதமா?அரசியலா?

இவற்றையெல்லாம் உங்களுக்கு அறிமுகபடுத்தியது யார் ?

இயற்க்கையா?

நீங்கள் எதற்காக பிறந்தீர்கள் எதற்காக இருக்கீறீர்கள் என்பதை நினைக்க வைக்காமல் உங்கள் சிந்தனையை உங்கள் இயக்கத்தை கடிவாளம் கட்டிய குதிரையாய் ஓடவைப்பதே இந்த முருகு வின் நுட்பம்.

அது எப்படி எதையுமே சிந்திகாமல் நம்புகிறோம் ? நன்கு சிந்தித்தே செயல்படுகிறோம் என்கி்ற்களா ?

உங்கள் சிந்தனையை நினைவை கட்டுபடுத்தும் யாவும் எதிர்ச்சியாக உருவாக்கப்பட்டது அல்ல அனைத்தும் கணித முறை இப்படியும் சொல்லலாம் கணித வலை.

பணம், அறிவியல், கட்டிடகலை, அரசியல், மதம், etc..

இப்படி எந்த துறையில் கவனம் செலுத்திகீற்களோ அனைத்துமே கணிதமுறை (கணிதவலை) தான்.

உங்கள் வாழ்நாள் முழுவதையும் கரைக்கும் கணிதமுறை.

அந்த கணிதமுறையின் (கணிதவலையின்) உச்சம்  9 (ஒன்பது).....

சிந்தனை தூண்டல் தொடரும்.....

சதிகாரியே...

 




வானம் மழையை பொழிகிறது
என்பது எல்லோருக்கும் தெரியும்...

ஆனால்...

அது நிலா பெண்ணுடன் கொண்ட
காதல் தோல்வியால்...

என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

நான் சிந்தும் கண்ணீர் துளிக்கு
காரணம் பலர் அறியாமல் போகலாம்...

சதிகாரியே...

நீ கூடவா அறியவில்லை...

என் கண்ணீர் துளிக்கு காரணம்

நீ என்பதை.....

வங்கத்து புலி மம்தா பானர்ஜி 😁

 


28/07/2021

புரட்சி தோற்றதாக வரலாறே இல்லை...

 


இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது.

பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது.

செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின‌, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன.

கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி.

அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன.

எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள்  இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

உலக புரட்சிகளை எல்லாம் புரட்டி புரட்டி படிக்கிறோம், புரட்சியாளர்களை எல்லாம் பூப்போட்டு வணங்குகிறோம்..

ஆனால் எம் இனத்தின் இழிவை தீர்க்க எந்த புரட்சியையும் நாம் செய்யத் தயாராக இல்லை என்பதுதான் வெட்கமான செய்தி.

எகிப்திலும் லிபியாவிலும் எதற்காக புரட்சிகள் நடைபெற்றன?

வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறைகள், ஊழல் அரசாங்கம், முற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்காகவே மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை எதுமே தமிழ்நாட்டில் இல்லையா?

குடும்ப ஆட்சியும் ஊழல் நிறைந்த அரசும் தமிழ்நாட்டை அறுபது ஆண்டுக்கு மேலாக சீரழித்து வருகிறதே அதற்கெதிராக எப்பொழுதாவது மக்கள் புரட்சி வெடித்ததா?

அரசியல் கட்சிகள் தான் இவற்றுக்காக குரல் கொடுக்கின்றன‌. விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் தான் கண்டன போராட்டங்களில் ஈடுபடுகின்றன அதிலும் அரசியல் உள்நோக்கங்கள் கலந்திருப்பதால், இதை ஒரு அரசியல் பழிவாங்கல்கள் அல்லது எதிர்க்கட்சிகளின் யதார்த்த எதிர்ப்பியல் என்றே பொதுவாகப் பார்க்கப்படுகின்றது.

காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லை பெரியாரில் தண்ணீர் தரவில்லை, ஒக்கனேக்கல்லில் தண்ணீர் இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.

வெறும் ஐந்து நாட்கள் எகிப்திலே ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினால், முற்பது ஆண்டுகால குடுப்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமானால்; அறுபது ஆண்டுகால குடும்ப, ஊழல், அடக்குமுறை அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியாதா?

மெளனத்தின் வலியோடு வாழுகின்ற எம் மக்கள் எவ்வித புரட்சிகளும் செய்யாதது ஏன்?

மக்களை நொந்து என்ன பயன். இலவசங்களோடு எம்மை வாழப்பழக்கி விட்டார்கள் எம் அரசியல் தலைவர்கள், இலவச தொலைக்காட்சி, இலவச வீடு, இலவச சோறு, இலவச மனைவி...

உழைத்து வாழ்ந்து உயர்ந்து நின்ற ஒரு இனத்தையே உறங்கி வாழுங்கள் என சோப்பேறியாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.

எல்லாம் நிச்சயமாக ஒருநாள் மாறும் மாறாது என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறிவிடும் என்று சொல்லுகிறான் மார்க்ஸ்.

மாற்றம் நிகழும் ஆனால் அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டுமா தமிழா?

மாற்றம் வேண்டும் அதை நாம் தானே மாற்றவும் வேண்டும்.

மக்கள் புரட்சி என்றைக்குமே தோற்றதில்லை. வன்முறை வேண்டாம் அறிவாயுதம் ஒன்றே போதும்.

புரட்சி செய்யும் மனதோடு பூத்திரு, காலம் நம் கைகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க காத்திருக்கிறது...

பிராடு பாஜக Vs திருட்டு அதிமுக...

 


காவிரி தமிழர்களின் தாய்மடி..



நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டு விட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க..

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள் தான் ஆனது போல இருக்கு..

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டு தான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்து கொண்டே தான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு தான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்த்துக் கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக் கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்ட போதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக் கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா?

கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்..

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.

நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது.

ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம்.

கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.

ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.

அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக் கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

பிராடு பாஜக நிர்வாகி சிக்கினான்...

 


அதிமுக கலாட்டா...