02/08/2021

நான்...

 



வரையப்படாத ஓவியங்கள்...

செதுக்கப்படாத சிற்பங்கள்...

எழுதப்படாத எண்ணங்கள்...

இவைகளை போலத்தான்...

சராசரி மனிதனாய்
எனது வாழ்க்கையும்...

கண்களில் ஆயிரம் கனவுகளோடு...

நெஞ்சினில் உடையாத
தைரியத்தோடும்...

தினம் தினம்
எதிர் நீச்சலும் போட்டுக்கொள்கிறேன்...

என்றாவது தூரிகையில் படிந்து
ஓவியமாக மாட்டேனா...

யார் கண்ணிலாவது பட்டு
சிலையாக மாட்டேனா...

யாராவது எண்ணங்களில் புகுந்து
வரியாக மாட்டேனா என்று...

இந்த கோணல்கள் நிரைந்த
வாழ்க்கையில்...

வாய்ப்பினை எதிர் நோக்கி
சராசரி மனிதனாய் 
காத்துக்கிடக்கிறேன் நான்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.