09/08/2021

காத்திருக்கிறேன்...

 




எதையும் யாரிடமும்
யாசகம் கேட்டு...

பழக்கமில்லை
எனக்கு...

உன்னை நேசித்தபின்...

உன்னை
உன்னிடம் யாசிப்பதற்கு...

எத்தனை ஆண்டுகள்...

எண்ணிப் பார்க்கையில்
எனக்கே பெருவியப்பாய்...

எளிதில் மறந்துவிட்டாய்...
என்னையும் என் காதலையும்...

உண்மையான காதலுக்கு
மரியாதையில்லை என்று 
உணர்த்திவிட்டாய்...

காத்திருக்கிறேன்
உனக்காக அல்ல...

உன் நினைவுகள்
என் மனதை விட்டு
அகலும் வேளைக்காக.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.