21/01/2025

யாருகிட்ட 😬

 


தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும் - அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும் - அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?.

தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும் - அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படியென்றால்  புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?

எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்... அதுதான் நல்லது...


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.