03/09/2018
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய நீதிபதி நியமனமும் குழப்பங்களும்...
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
இதன்படி நீதிபதி எஸ்.ஜே.வசிப்தார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.ஆனால் திடீரென்று அந்த குழுவின் தலைவரான எஸ்.ஜே.வசிப்தார் தன் சொந்த காரணங்களுக்காக இந்த குழுவில் என்னால் அங்கம் வகிக்க முடியாது என்று தனது பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் புதிதாக ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோரை நியமிக்க பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த வேதாந்தா நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு நீதிபதியையும் நியமிக்கக் கூடாது என்று வாதாடியது. இதனடிப்படையில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த தருண் அகர்வால் என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்திருக்கிறது.https://www.google.co.in/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/ngt-appoints-ex-judge-justice-tarun-agrawal-as-chairman-of-panel-to-decide-vedanta-s-plea-118083100486_1.html
நமக்கெல்லாம் நன்றாக தெரியும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் குஜராத்தை சேர்ந்த அனில் அகர்வால் என்று இப்போது அதே குஜராத்தை சேர்ந்த தருண் அகர்வால் என்ற ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை மிக முக்கியமான வழக்கில் தலைமைப் பொறுப்பில் நியமித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இது ஏதோ 'அகர்வால்' என்ற பெயரை வைத்து நாம் சந்தேகத்தைக் கிளம்புகிறோம் என்று குறுகிய எண்ணத்தோடு யாரும் பார்க்க வேண்டாம். உண்மையிலேயே தற்போது ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தருண் அகர்வால் ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் 2008இல் காசியாபாத்தில் பிராவிடண்ட் பண்ட் நிறுவனத்தை நடத்தி மக்கள் பணத்தை முறைகேடு செய்த முக்கிய குற்றவாளியை விடுவித்தார்கள் என்ற ஊழல் குற்றச்சாட்டிற்காக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது மிக முக்கியம்.
https://m.hindustantimes.com/delhi-news/pf-scam-tainted-judges-forgiven/story-qa0m3CJznjV0SMsCEkTrGI.html
அப்படிப்பட்டவர் இந்த ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது நமது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது...
உனக்கு நிகர் நீயே...
விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.
நுட்பமான பண்புகள் வாய்ந்த ஒரு மனிதரை மனதுக்குள் பாராட்டுவது மிகவும் நல்லது. அத்தகைய மனிதராக உங்களை நீங்களே வளர்த்தெடுப்பது வளர்ச்சியின் அடுத்த படிநிலை.
மதிப்பும் அன்பும் ஈடுபாடும் காட்டும் விதமாக வாழ்வில் ஒருவரைக் காண்பது மிகவும் நல்லது. அத்தகைய சிறப்புகள் அனைத்தையும் பெறும் விதமாய் நீங்களும் வளரமுடியும் என்பதை உணர்வதே முக்கியமான படிநிலை.
இன்னொருவரின் வாழ்வை நீங்கள் வாழ முடியாது. ஆனால் உயர்ந்தவர்களின் தாக்கம் பெற்று உங்கள் வாழ்வை நீங்கள் வடிவமைக்க முடியும்.
வாழ்க்கை உங்களைக் கேட்கும் கேள்விகளுக்கு நீங்களே விடையாக இருங்கள்.
வாழ்க்கை உங்கள் முன்வைக்கும் சிக்கல்களுக்கு நீங்களே தீர்வாக இருங்கள்.
நீங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு மனிதர் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை எந்த நிலையிலும் நீங்கள் கைவிடாதீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் எப்படியாவது செய்து காட்டிவிடுங்கள்.
வாழ்வை மதித்து ரசித்து வாழ்வதென்று முடிவெடுங்கள். அதில் உறுதியாக இருங்கள்.
அன்பும் ஆனந்தமும் பரவசமும் மிக்க வாழ்வை வாழ்வதென்பதில் உறுதியாக இருங்கள்...
காமவெறியில் இரண்டு குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. கணவனுக்கும் விஷம் வைத்தார்...
சென்னை கிண்டியை அடுத்து குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு அதே பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.
தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய் கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று விஜய் மாதம் கடைசி என்பதால் வேலை அதிகமாக இருந்ததால் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அபிராமி, டீயில் விஷத்தைக் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்று விட்டு சுந்தரத்துடன் எஸ்கேப் ஆனர்.
இந்நிலையில், வேலை முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவர் விஜய் வீட்டின் கதவு லேசாக சாத்தப்பட்டிருந்தது திறந்துப் பார்த்ததும் தனது குழந்தைகள் இறந்துக் கிடந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அலறித் துடித்தார்.
தகவலறிந்த போலீசார் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரு சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவரது அபிராமிக்கு பலமுறை போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தனது கள்ளக் காதலன் சுந்தரத்துடன் அபிராமி எஸ்கேப் ஆனது தெரிந்துள்ளது.
இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் விசாரணையில் குன்றத்தூர் - போரூர் நெடுஞ்சாலையில் இருந்ததை அறிந்த போலீசார் கள்ளக் காதலன் சுந்தரத்தை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அபிராமியுடன் இருந்த கள்ளக்காதலை ஒப்புக் கொண்டார். மேலும் தனக்காகவே அவரது குழந்தைகளை அபிராமி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அபிராமியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, தான் கள்ளக் காதலனுடன் எஸ்கேப் ஆகும் முன்பாக அபிராமி கணவருக்கும் தேனீரில் விஷம் கலந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அதை அவர் குடிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். உடல் சுகத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தனது கணவரையும் கொள்ள விஷம் வைத்துவிட்டு பக்காவாக ப்ளான் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
எண்ணெய் வள நாடான UAEக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்க்கும், டீசல் 36 ரூபாய்க்கும் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது...
உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
UAEயுடன் சேர்த்து இன்னொரு எண்ணெய் வள நாடான ஈராக், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர், மொரீஷியஸ் , மலேசியாவிற்கும் இந்தியா பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்துள்ளது.
உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 24,100 கோடி டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச சந்தையில் 3.9 சதவீதமாகும்.
இது கஜினி முகமது இந்தியா மேல 18 முறை படையெடுத்து நாட்டை சுரண்டிட்டு போனான் என சொன்னதைவிட இது மிக அதிகம். இங்கே சுரண்டுவது உள்நாட்டு கஜினிகள்...
Subscribe to:
Posts (Atom)









