26/01/2019

கிராமசபை தீர்மானம் இயற்றுங்கள் - பேராசிரியர் த. செயராமன்...


Subscribe the channel...

நாகை , தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், வெவ்வேறு பெயர்களில் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன.

ஹைட்ரோகார்பன் முதல் சுற்று ஏலத்தில் மரக்காணம் முதல் கடலூர் வரை, கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகை மாவட்டம் வைதீஸ்வரன்கோவில் வரை, பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி, புஷ்பவனம் வரை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது சுற்று ஏலத்தில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை, திருப்பூண்டி, கருப்பம்புலம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகள் இரண்டாவது சுற்று  ஏலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க கொடுக்கப்பட உள்ளன.  கடற்கரைப்பகுதிகளை மக்கள் காலிசெய்ய வேண்டிய நிலை விரைவில் ஏற்படும். 

இவையன்றி,  இவற்றில் விடுபட்ட காவிரிப்படுகை பகுதிகள் 1860 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மூன்றாவது சுற்று ஏலத்தில் தரப்பட உள்ளன.  உங்கள் ஊரும் ஹைட்ரோகார்பன் மண்டலங்களுக்குள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த கிராமசபைத் தீர்மானங்களை சனவரி - 26 அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஒவ்வொரு கிராமமும் கீழ்க்கண்ட அல்லது இதை ஒத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

"நம் ஊர் ____________ஒரு வேளாண் கிராமம் ஆகும். நம் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், விளைநிலங்களிலோ அல்லது தரிசு நிலங்களிலோ, இயற்கை எரிவாயு - எண்ணெய் , மீத்தேன், ஹைட்ரோ கார்பன்கள் எடுக்க அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் எதுவாக இருந்தாலும், எவ்வித பணிகளையும் நடத்த அனுமதி இல்லை என்று தீர்மானிக்கப்படுகிறது."

உங்கள் ஊர் பாதுகாப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.  உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமின்றி பிற கிராமசபைகளிலும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.  விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.

பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு...

இந்திய குடியரசு தினத்தை புறக்கணிப்போம்... மொழிப்போர் தியாகிகள் நாள்: சனவரி 25...


சமசுகிருதமயமாக்கம் நடைபெறும் இக்காலக்கட்டத்தில் தமிழன் மீண்டும் மீண்டும் போராடிக் கொண்டே இருக்கிறான்.

அன்று இந்தி - மயமாக்கத்திற்கு எதிராக மட்டுமே போராடினான்.

இன்று சமசுகிருதமயமாக்கம் ஆரிய - மயமாக்கம் என்ற எதிரியோடு மட்டுமல்ல..

திரவிட மயமாக்கம் என்ற இந்தியக் கருணா-வீரமணி-ஜெயா கும்பல் துரோகிகளுக்கு எதிராகவும் அவன் போராட வேண்டியிருக்கிறது.

இந்தக்கும்பல் கூட்டணி விசயகாந்த் வரை நீண்டு கொண்டே செல்வது தான் துயரம்.

நம்முடைய விளக்குகளுக்கும், தீப்பந்தங்களுக்கும், வெடித்தெழும் உணர்வுகளுக்கும் தேவையான தீயை அந்த மொழிப்போர் போராளிகளின் அணையாத நெருப்பில் பற்ற வைத்துக் கொள்வோம்..

இந்தி எதிர்ப்பு போரட்டம் 1937 முதல் பல ஆண்டுகளாக நடைபெற்றது என்றாலும் இதன் தீவிரத்தன்மை கொண்டு இரண்டு ஆண்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1939 மற்றும் 1965...

1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார்.

தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.

எத்தனை ஆண்டுக்காலமாய் ஒரே பொய்யுரையை திரும்பத்திரும்ப திணிக்கின்றனர்.

ஆரிய ராஜாஜியின் விஷக் கொடுக்கு  2015 லும் துடித்துக்கொண்டு தான் அலைகிறது.

அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்.

1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது.

மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள்.

சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார்.

அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது.

3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப் பிடிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர்.

1938 டிசம்பர் 5 அன்று கைது செய்யப்பட்ட நடராசன் காவல் துறை சித்திரவதையால் 1939 சனவரி 15 கொல்லப்பட்டார்.

1939 பிப்ரவரி 11 அன்று கைது செய்யப்பட்ட தாளமுத்து மார்ச் 13 அன்று காவல்துறை சித்திரவதையால் கொல்லப்பட்டார்.

இவர்களே முதல் மொழிப்போர் தியாகிகள்...

இவர்களோடு போராட்டத்தில் மரித்த மொழிப்போர் தியாகிகள்.

பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.

ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள்.

1965 சனவரி 26 முதல் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா. காமராசன் என்பவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்தனர்.

1964 சனவரி சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. பக்தவச்சலம் முன்பு ஒரு இளைஞன்...

அய்யா தமிழைக்காப்பாற்றுங்கள், இந்தியை நுழைய விடாதீர்கள், நீங்களும் தமிழர் தானே.

பக்தவச்சலம் உத்தரவு: இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்.

சனவரி 25 விடியற்காலை 4.30 மணிக்கு தனக்கு தீயை வைத்துக்கொண்டு "தமிழ் வாழ்க, இந்தி ஒழிக" என்று கத்திக் கொண்டே கருகிப்போனார் அந்த கீழப்பழூர் சின்னசாமி, அன்றைய முத்துக்குமாராய்.

1965 மொழிப் போராட்டத்தின் முதல் மொழிப் போராளி கீழப்பழூர் சின்னசாமி.

சின்னச்சாமியைப் போல ஒரு பத்துத் தமிழனாவது உயிர் நீத்தால் தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று அடிக்கடி பேசிவந்த  கோடம்பாக்கம் சிவலிங்கம் தான் மொழிப்போரில் இரண்டாவதாகத் தீக்குளித்தவர்.

இந்திய அரசின் வன்முறைக்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், மற்றும் சிவலிங்கம்.

16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

ஐந்து போராட்டக்காரர்கள், சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் மூவர், தண்டபாணி, முத்து, சண்முகம் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இரு வார கலவரங்களில் அதிகாரபூர்வ தகவலில்படி காவல்துறையால் 70 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் 500க்கும் கூடுதலானவர் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்களின் தகவல்கள் கூறுகின்றன.

1 பிப்ரவரி அன்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.

தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்:
ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பாட முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.
இந்தியல்லா மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தியல்லா மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.

மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.

சென்னையில் இரண்டு பேர் தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற நிகழ்ச்சி இதற்குமுன் இந்தியாவில் நடந்ததில்லை. இப்போராட்டத்தைக் கைவிடுங்கள். இந்தி குறித்து உள்ள சிக்கல்களை நாம் ஒருவருடன் ஒருவர் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அன்றைய இந்தியப்பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி. சனவரி, 29 1965 தினத்தந்தி.

தீக்குளித்தவர்களின் முன்னோடிகளாக 1939 ல் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தாளமுத்து, நடராசன் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் பேசும்போது அண்ணாதுரை...

இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும். என்று சொன்னார்.

அவரோ, அவருக்குப்பின் வந்த திராவிடக் கருணாக்கள் எழுப்பினார்களா?

தங்கள் கையில் ஆட்சி கிடைத்த 2 ஆண்டுகளுக்குள் உத்திரப்பிரதேசத்தில், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் என்று வரலாற்றையே மாற்றி எழுதினார்களே பாஜக கட்சியினர்.

50 ஆண்டு கால 'தமிழர்' ஆட்சியில் இந்த மொழிப்போர் வீரர்களின் வரலாற்றைக் கூட நம் பாடப்புத்தகங்களில் பதிவு செய்ய வில்லையே?. எல்லாம் மணிமண்டபத்தோடு சரி.

மொழி ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானத்தில் தான் இடம் பெறுகிறது என்று கூறும் ஒரு சிலர் கூறுவதுண்டு. ஆனால் பொறியியல் கல்லூரியில் படித்த பீளமேடு தண்டபாணி முதல் 6 வது வகுப்பைக்கூட எட்டாத விராலிமலை சண்முகம் வரை தெரிந்து வைத்திருந்தார்கள்-

மொழி என்பது தேசிய இனத்தின் முகமும், முகவரியும் என்று.

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,635 தாய்மொழிகளும், 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.

ஆனால் அன்றைய ராஜாஜி, சாஸ்த்ரி களின் இன்றைய பிரதிநிதியான நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்கிறது. அது தொடர்பான அறிக்கையில்...

1, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது.

2, ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

3, மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும் படி      அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றிக்கை அனுப்பியது.

இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு அன்று அண்ணாதுரையின் பதில்...

எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத் தான் இருக்கும்...

பாஜக வும் குடும்ப அரசியலும்...


அரசு ஊழியர் சம்பளம் 50 ஆயிரம் கோடி. பென்சன் 25 ஆயிரம் கோடி. இன்னமும் போராட்டமா? சட்ட பஞ்சாயத்து இயக்கம்...


இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. ஆக அதன் இயந்திரமாக உள்ள அரசு ஊழியர்க்கு சம்பளம் கேட்டதை கொடு.

தமிழ்நாடு வருமானத்தில் சம்பளமே 50 சதமா என  கேட்பாயானால், தாதுக்கொள்ளை, தனியார் கொள்ளை என வருசம் லட்சம் கோடிக்கு உள்ளதை அரசே நடத்தி வருமானம் பார்க்க சொல்.

அரசு ஊழியர்க்கு 75 ஆயிரம் கோடியா என்றால், இந்திய அரசு கனிம கொள்ளை, வரி கொள்ளை என ஆண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு சுரண்டுவதை தடுத்து தமிழ்நாடு அரசு வருமானமாக மாற்ற சொல்.

அரசு ஊழியன் வேலை செய்வதில்லை என்றால் அதிக வேலை தர சொல்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்றோர், தமிழ்நாட்டு அரசு துறை மீது பாமர மக்களிடம் வெறுப்பை விதைத்து, அரசுத்துறையை காலி செய்து தனியார் மயமாக்கும் கட்ட பஞ்சாயத்து இயக்கமாகவே தெரிகிறது. கூடுதலாக இந்திய கொள்ளையை திரும்ப பெற வழி சொல்லாது இருக்கும் அரசுத்துறையை அழிக்கும் மாமா பஞ்சாயத்து இயக்கமாகவும்...

நாங்கள் கூறும் உலக வணிகர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள் என்பதை நீங்கள் எப்போது புரிந்துக்கொள்ள போகிறீர்கள்..? அரசாங்கம் பொம்மை தான்...


பாஜக படு தோல்வியடையும் பிரபல டெக்கான் ஹெரால்டு கருத்துக்கணிப்பு அதிரடி சர்வே...


நாடாளுமன்றத் தேர்தலில் 175 இடங்களுக்கு மேல் கிடைக்காது: பாஜக கூட்டணி படுதோல்வி உறுதி...

புதுடில்லி, ஜன.22 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு பலத்த அடிகாத்திருப்பதாக, டெக்கான் ஹெரால்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், எந்தக்கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காது என்று கூறியிருக்கும் டெக்கான் ஹெரால்டு, காங்கிரஸ் தலை மையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி 200 இடங்கள்வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் 283 இடங்கள் வரை பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சியமைத்தார். ஆனால், 2019 மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 160 முதல் 175 இடங்களுக்கு உள்ளேயே கிடைக்கும் என்று டெக்கான் ஹெரால்டு கூறியுள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு 180 முதல் 200 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிகபட்ச இடங்களை காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும் என்றும் தெரி வித்துள்ளது. மாநிலங்கள் அளவில் தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஜனதா போன்றவை 160 முதல் 180 இடங்களைக் கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டுள்ள அந்த ஏடு, தனியாக எந்தவொரு கட்சிக்கும் 272 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும் கணித்துள்ளது...

சிந்தித்துப் பார் தமிழா...


பிரபஞ்ச இரகசியம்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறபோகிறேன்.

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை.

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது. அது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...

அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் பின்லேடன் மற்றும் அல்கொய்தாவால் நடத்தப்பட்டது என இன்றும் நீங்கள் நம்புகிறீர்களா.?


யாளி - சிறு குறிப்பு...


யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது.

யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது.

பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்...

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்...

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்...

(௧) சிம்ம யாளி (௨) மகர யாளி (௩) யானை யாளி...