நாடாளுமன்றத் தேர்தலில் 175 இடங்களுக்கு மேல் கிடைக்காது: பாஜக கூட்டணி படுதோல்வி உறுதி...
புதுடில்லி, ஜன.22 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு பலத்த அடிகாத்திருப்பதாக, டெக்கான் ஹெரால்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், எந்தக்கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காது என்று கூறியிருக்கும் டெக்கான் ஹெரால்டு, காங்கிரஸ் தலை மையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி 200 இடங்கள்வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் 283 இடங்கள் வரை பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சியமைத்தார். ஆனால், 2019 மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 160 முதல் 175 இடங்களுக்கு உள்ளேயே கிடைக்கும் என்று டெக்கான் ஹெரால்டு கூறியுள்ளது.
அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு 180 முதல் 200 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிகபட்ச இடங்களை காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும் என்றும் தெரி வித்துள்ளது. மாநிலங்கள் அளவில் தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஜனதா போன்றவை 160 முதல் 180 இடங்களைக் கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டுள்ள அந்த ஏடு, தனியாக எந்தவொரு கட்சிக்கும் 272 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும் கணித்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.