26/01/2019

ஆசிரியர்களையும் ஆசான்களையும் விமர்சனங்கள் செய்யும் உத்தமன்களுக்காக...


ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தை விமர்சிப்பவர்களே...

இதை கேளுங்கள்...

நாங்கள் கட்டிய 50ஆயிரம் கோடி ரூபாய்  CPS என்ற பெயரில் அரசு பிடித்ததே..

அதை எங்கே என்று கேட்கிறோம் அரசிடம்..

பதிலில்லை..

நிதிநிறுவனங்கள் மோசடி செய்தால் அந்த கம்பெனி முன்நின்று பணமிழந்தவன் கல்லெறிவானே..

அதுபோன்று நாங்கள் செய்தோமா?

அறவழியில்தானே போராடுகிறோம்..

ஆளுக்கோரு ஊதியம் என்ற பெயரில் உள்ள ஊதியமுரண்பாடுகளை களையுங்கள் என்கிறோம்..

இது தவறா?

ஒரு எம்எல்ஏ பதவியேற்று பத்து நிமிடத்தில் செத்து போனால் அவருக்கு பென்சன் உண்டு..

ஆனால் 32வருடங்கள் வேலை பார்த்த ஒரு ஆசிரியனுக்கு பென்சன் கிடையாது..

கடைசிக்காலத்தில் சாக்பீஸ் துகளோடு அவன் வாழ்வு அஸ்தமிக்க வேண்டும்..

ஆசிரியருக்கு சம்பளம் அதிகம் என கூச்சலிடுபவர்களே..

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்று சிலர் எழுத்தால் எழுதலாம் அதை மனத்தால் கொண்டவர்கள் நாங்கள்..

எங்கள் ஊதியம் உடனே உயர்ந்து விடவில்லை..

20வருடம் வேலை பார்த்த என் சம்பளம் இப்போது 70000.

ஆரம்பகாலத்தில் 5789 தான்..

இதில் வருமானவரிக்காக ஒருமாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும்..

சட்டப்பிரிவு 51 100 101ஆகிய பிரிவுகளை நீக்க சொல்கிறோம்.

இவை என்ன தெரியுமா?

கூச்சலிடுபவர்களே...

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சட்டப்பிரிவுகள். இதை நீக்கு என முழக்கமிடுகிறோம்..

ஆனால் நீங்களோ 5000ரூபாய்க்கு பாடம் நடத்த ஆள் தேடுகிறீர்கள்..

ஜெயலலிதா கூறிய அதே வார்த்தைகளை 90சதவீதம் அரசுப்பணம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்கிறது என்பதை நம்புகிறவர்களே..

அப்படியானால் அரசியல்வாதிகள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணங்கள் அரசு பணமில்லையா?

அது விளையாட்டுக்காக சின்னபிள்ளைகள் வைத்திருக்கும் பணமா?

இன்று நீ முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் எழுத்துக்களை தட்டச்சு செய்கிறாயே...

அவதூறாய் பேசுகிறாயே...

அந்த எழுத்துக்களை கற்றுக் கொடுத்தவன் ஒரு ஆசிரியன் என்பதை மறவாதே..

பின்லாந்து கல்விமுறையை சிலாகிப்பவனே...

அங்கே ஆசிரியர்கள் கொண்டாடப் படுகிறார்கள்..

இங்கே ?

ஊதிய உயர்வு கேட்டு போராடுகிறோம் என்பது பொய்..

மேலே சொன்னவை தான் மெய்..

புரியவில்லையெனில் போராட்ட களம் வா..

அங்கே உனக்கு நாங்கள் கற்று தருகிறோம்..

ஏனென்றால் நாங்கள் ஆசிரியர்கள்...


A father and mother give a child to this world but a teacher gives the world to child

There are two holy places in the world one is womb of mother another is classroom of teacher

The destiny of the nation build within the four walls of the class room..... One who criticize blame the teachers  never succed in his life...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.