சென்னை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தில், ஆசிரியை ஒருவரது பேச்சு, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தில், பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில், சில ஆசிரியர்கள், 'மைக்' பிடித்து, ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுகின்றனர்.
போராட்டத்தின் போது, ஆசிரியை ஒருவர் பேசியது, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாகியுள்ளது.அவரது பேச்சு விபரம்:
இந்த சிங்கங்களை எதிர்க்க நினைப்போருக்கு என்னவாகும் என்பது, நாளை தெரியும். அப்பாவும், அம்மாவும், எல்லா நகைகளையும் விற்று, எங்களை படிக்க வைத்து, ஆசிரியராக்கி உள்ளனர்.
ரேஷன் கணக்கு ஆசிரியராக தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுகிறோம். மறுபடியும் வேலைக்கு ஒரு தேர்வு எழுத சொல்றீங்க...
அதையும் எழுதி, தேர்ச்சி பெற்று ஆசிரியராக வருகிறோம்.ஆசிரியரான பின், ரேஷன் கடை கணக்கெடுக்க போகச் சொல்றீங்க; வாக்காளர் கணக்கெடுக்க சொல்றீங்க; பொருளாதார கணக்கெடுக்க சொல்றீங்க; எல்லாத்துக்கும் போறோம்.
நீங்க சொல்ற வேலையை எல்லாம், 'ஊங்' கொட்டி... ஊங் கொட்டி... செய்கிறோம்; எங்களை, தலையில கொட்டி கொட்டி, நடு தெருவுல உக்கார வச்சுட்டீங்க.
ஓய்வூதியம்...
நீங்க சொன்ன, எல்லா வேலையையும் செய்த பிறகும் விட்டீங்களா... எல்லாரையும், காலியிடம் இருக்கு... காலியிடம் இருக்குனு, கடைசியா, அங்கன்வாடிக்கு போகச் சொல்றீங்க.
எத்தனை இடங்களில், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகள் காலியாக இருக்கு; அங்க அனுப்புங்க... பள்ளியை நிர்வகிக்க தெரியுற எங்களுக்கு, ஒரு தொகுதியை நிர்வகிக்க தெரியாதா என்ன... அனுப்புங்க; செஞ்சு காட்டுறோம்.
ஓய்வூதியம் எங்களின் உரிமை. நீங்கள் கொடுத்து தான் ஆகணும். கொடுக்க மாட்டேன்னு, சொன்ன காலம் எல்லாம் மலையேறி விட்டது. இனிமே நாங்க கேக்குறது எல்லாவற்றையும், கொடுத்தே ஆகணும். அதுவரை, போராட்டம் தொடரும்; வெற்றி கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ, வாட்ஸ் ஆப்பில் வைரலாக வலம் வருகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.