13/05/2017

காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்க வேண்டும் ஐ.நா.சபை...


காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்கவேண்டும் என ஐ.நா. கூறி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுத் தாக்கும் பிரிவினை வாதிகளின் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்தி, வன்முறை தாக்கு தலை நிகழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே.கோபால் வெளியிட்ட அறிக்கையில், பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட 22 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று கூறினார்.

பொது ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் இணையதள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு அரசு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. தனிநபராகவோ, குழுவாகவே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செய்திகள், கருத்து சித்திரங்களை சமூக வலைதளங்கள் பரவ செய்யக்கூடாது. இந்த உத்தரவு ஒரு மாதத்துக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தடை மீறி வீடியோக்கள் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்கவேண்டும் என ஐ.நா. கூறிஉள்ளது.

பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும், காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்க வேண்டும், இது அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.