நீட் ஏன்?
இந்திய ஒன்றியத்தின்
டெல்லி - அரசியல் தலைநகர்
மும்பை - பொருளாதாரத் தலைநகர்
சென்னை - மருத்துவத் தலைநகராக அறியப்படுகின்றன.
அதாவது இந்தியாவிலேயே சென்னையில் தான் நவீன மருத்துவமனையும் திறமையான மருத்துவர்களும் இருக்கின்றனர்.
செலவும் குறைவு என்பதால் பல வெளிநாட்டினர் மருத்துவம் பார்க்க சென்னைக்கு வருகின்றனர்.
இந்தியாவிற்கு மருத்துவம் பார்க்கவருவோரில் முக்கால்வாசிப்பேர் சென்னைக்குத் தான் வருகிறார்கள்.
இங்கே வரும் வெளிநாட்டவர் சுற்றிப் பார்க்கவும் செய்வர்.அவர்களுக்கு தமிழகத்தின் கோயில்கள் மிகவும் பிடித்து தமிழகத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனர்.இந்தியாவில் தமிழகம் சுற்றுலாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையெல்லாம் பார்த்து வயிறெரிந்த ஹிந்தியர்கள் இதற்கு அடிப்படையான தமிழர்களின் மருத்துவ அறிவுக்கு வைத்த ஆப்புதான் நீட்..
மத்திய அரசின் பாடத்திட்டமான CBSC படித்தோர் தமிழகத்தில் 1.6% மட்டுமே.
இந்த பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்வி கேட்போம் என்கிறது மத்திய அரசு.
இதற்கு உறுதுணையாக இணைந்து வழக்கை வாதாடி வென்றது தெலுங்கர் நடத்தும் சங்கல்ப் அமைப்பு..
தமிழகத்தின் 98.4% மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாகவே ஆகிவிட்டது.
இது மத்திய ஹிந்தி அரசின் மாநிலங்களின் உரிமை மீதான தாக்குதல்..
இது தமிழகத்தைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது.
ஆனால் திராவிடம் ஊட்டிய பார்ப்பன வெறுப்பு விசம் யாரையும் சரியான திசையில் சிந்திக்க விடவில்லை.
1930ல் சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டர் ஆகலாம்.
அதைத்தான் இப்படி மீண்டும் கொண்டு வந்து விட்டான் பிராமணன்.
செயினை கழட்ட சொன்னீர்களே பூணூலை ஏன் கழட்ட சொல்லவில்லை?
என்றெல்லாம் முகநூல் பதிவர்கள் விளாசித் தள்ளுகிறார்கள்.
இது தமிழக அரசின் பாடத்திட்டத்தை ஒழித்து ஹிந்தி அரசின் பாடத்திட்டத்தைக் கொண்டுவர நடக்கும் நவீன மொழித்திணிப்பு.
தமிழகத்தின் மீதான பிற இனத்தாரின் எரிச்சல்.
இது தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பனரை எதிர்த்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்லாது திராவிடத்தின் வெற்றி எனவும் கூறலாம்.
உண்மையான எதிரியை மறைத்து இல்லாத ஒன்றை நோக்கி நம்மை திசைதிருப்ப உருவாக்கப்பட்டதே திராவிடம்..
சரி. பார்ப்பன வெறுப்பாளர்கள் எக்கேடும் கெட்டு ஒழியுங்கள்.
மாணவர்களே...
இந்த ஆண்டு நீட் நடந்து ஆடை களைந்து அவமதிப்பு வரை உங்களுக்கு நடந்தாயிற்று.
அடுத்த ஆண்டு இரண்டு மாதம் முன்பே திட்டமிட்டு பெரிய போராட்டம் நடத்துங்கள்.
இந்த முறை நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை திட்டமிடுங்கள்.
அடுத்த தலைமுறை மாணவர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள்.
பொதுத்தேர்வை மொத்தமாகப் புறக்கணிப்பது சரியான பதிலடியாக இருக்கும்.
இது மருத்துவர் ஆக நினைக்கும் 'நன்றாகப் படிக்கும் மாணவர்களின்' பிரச்சனை மட்டும் இல்லை.இன்று அவர்களுக்கு நடந்தது நாளை ஒவ்வொரு மேற்படிப்பிற்கும் நடக்கும்.
ஏற்கனவே எல்லா அரசு வேலைகளிலும் வடயிந்தியனை நிரப்பிவருகிறார்கள்.
கல்வியையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்காகக் களத்தில் இறங்கினீர்கள்.உங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் கட்டாயம் வருவார்கள்.
அவர்களுக்கும் தரமான மருத்துவம் வேண்டும் தானே?
ஆனால் போராட்டம் மட்டுமே இறுதித்தீர்வு கிடையாது.
ஹிந்தியாவோடு நாம் இணைந்திருக்கும் வரை தமிழன் ஒருவன் கூட நிம்மதியாக வாழமுடியாது என்பது உறுதி.
நீட் போனால் இன்னொன்று அது போனால் மற்றொன்று என கொண்டு வந்து கொண்டே இருப்பார்கள்.நாம் போராடி போராடி சாக வேண்டியது தான்.
தமிழர்நாடு விடுதலையே இறுதியான தீர்வு...
இளைய தலைமுறை மாணவர்களே.. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.