ரஜினியிடம் ஒரு நிமிடம் பேச வேண்டுமென ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார். தற்போது பேசுவதெல்லாம் கடினம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் தன்னால் இனி தலைவரைப் பார்த்து பேச இயலாது, ஒரே நிமிடம் முடித்து விடுகிறேன் எனக் கூறி பேச ஆரம்பித்திருக்கிறார்.
தன்னுடைய நண்பர்கள் பலரும் ரஜினியின் ரசிகர்கள் என்றும், அவர்கள் பலரும் பல கட்சிகளில் இருக்கிறார்கள் என்றும், கழுகு திரைப்படத்திலிருந்தே தான் ரஜினியின் ரசிகர் என்றும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததையும் சொல்லியிருக்கிறார்.
பாட்ஷா வெற்றிக்கு பிறகு, ரஜினி அரசியலுக்கு வருவாரென நம்பி ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். போஸ்டர் ஒட்டிய பிரச்னையில் கட்சியிலிருந்து இவரை நீக்கியிருக்கிறார்கள். அதிமுகவில் மாவட்டச் செயலாளராகும் வாய்ப்பிலிருந்தவர்.
பாபா படத்திற்கு பிறகு எப்படியும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்பதால் வேறு எந்த கட்சியிலும் இணையாமல் இருந்திருக்கிறார்.
இப்படி ஒவ்வொரு படம் வரும் போதும் ஏதாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்திருக்கிறார்.
நேற்றைய சந்திப்பில் எல்லா ஆதங்கத்தையும் ரஜினியிடம் கொட்டியிருக்கிறார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரஜினி பதிலேதும் தெரிவிக்கவில்லையாம்.
புலம்பியபடியே வெளியே வந்திருக்கிறார்.
அந்த ரஜினி ரசிகரின் வயது 59..
தட் இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது மொமன்ட்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.