2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் இது தொடர்பாக பல்வேறு நாடுகளில் இந்த இனப்படுகொலை சம்மந்தமான விசாரணைகள் நடைபெற்றது..
அப்படி நடந்த விசாரணையில், டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது..
அதில் தன்னிச்சையாக முனைவர் என்ற போர்வையில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பால் நியூமன் பங்கேற்றார்.
அதில் தமிழர் தரப்பு நபராக பங்குபெற்ற அவர் 41 பக்க அறிக்கையை சமர்பித்தார்.
அதில் விடுதலைப் புலிகளுக்கும்,ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக ,அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்..
விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் போரில் ஈடுபடுத்தியதாகவும்..
குழந்தைகளை விடுதலைப் புலிகள் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதால்,அதற்கு பயந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும், அதையும் மீறி புலிகள் , குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் கட்டாயமாக சேர்த்தாகவும்..
அவ்வாறு திருமணமான பெண்களுக்கு , கட்டாய கருக் கலைப்பை விடுதலைப் புலிகள் செய்ததாகவும்..
மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் , விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும்..
ஒரு பச்சை துரோக அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்..
சிங்களன் நேரடியாக விடுதலைப் புலிகள் தான் போர் குற்றவாளிகள் எனக் கூறுவதை..
மிகவும் விளக்கமாக கொடுத்து விட்டு வந்துள்ளார் நாம் தமிழர் என்ற இனத் துரோக கும்பலின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்...
ஏன் இப்படி அறிக்கை தாக்கல் செய்தீர்கள் என சில தினங்களுக்கு முன் "கனடிய தமிழ் வானொலி" க்கு அளித்த பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு...
விடுதலைப் புலிகள் மீது அந்த குற்றச்சாட்டுகள் உள்ளது உண்மை தானே.. அதனால் கூறினேன் என பதிலளித்துள்ளார் பால் நியூமன்..
மேலும் நேற்று ஏகலைவன் எழுதிய "முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பால் நியூமனை அழைத்திருந்ததால், அய்யா காசி ஆனந்தன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படிப்பட்ட ஒரு அறிக்கை வெளியானது அந்தக் கட்சியின் தலைவரான சீமானுக்கே தெரியாது என நம்பினாலோ, இல்லை இதை ஒரு பொருட்டாக நினைக்காமல் சீமானின் கோர்வையான மேடைப் பேச்சை மட்டுமே நம்பி சீமானை ஏதோ ஈழ விடுதலையின் ரச்சகர் போல நம்பினாலோ, இழப்பு யாருக்கென்று யோசிப்போம்...
இந்தக் கூட்டம் ஒரு பச்சை இந்தியக் கைக்கூலிகள் என்பதற்கு இதை விட எதாவது சான்று வேண்டுமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.