மாடு விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் என்பது மாட்டு இறைச்சிக்கு எதிரானது மட்டுமல்ல அது கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரபட்ட பண மதிப்பிழப்பின் தொடர்ச்சி.
இது மாட்டிறைச்சியில் இருந்து அடுத்து ஆடு கோழி என்று தொடரும்...
இந்தியாவின் கால்நடை சந்தை என்பது இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% . ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் இது 28%. அதாவது 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி..
இந்த மிக பெரிய வர்த்தகம் அரசுகளால் கட்டுப்படுத்தப்படாத வாரச்சந்தைகளில், கிராமபுற சந்தைகளில் மற்றும் உள்ளுர் உறவுகளின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதால், பெரும் நிறுவனங்களால் இச்சந்தையை கைக்கொள்ள முடியவில்லை.
3 லட்சத்து 40 ஆயிரம் கோடி நம் ஊர் சந்தைகளிலும், தெரு முனையில் இருக்கும் பாய் கடைகளிலும், கூடைகளில் மீனையும் கருவாட்டையும் விற்பவர்களிடமும், கூறைகள் அற்ற மீன் சந்தைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.
இது பெருவாரியான மக்களின் வேலைவாய்ப்புக்கும், உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலையிலான உணவு பொருட்களை வழங்கக் கூடியதாகவும் இருக்கிறது.
இது கிராமப்புற வேளாண் பொருளாதாரத்தின் மிக முக்கியமானதாக இருக்கிறது. நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிக்க அல்ல, இது நிழல் பொருளாதாரம் என்று சொல்லப்படும் வரிவருவாய்க்கு உள் வராத பெட்டிகடை, பூ கடை, சிறு, குறு மளிகை கடைகள், வார சந்தைகள் என்று இயங்கிய விவசாய உற்பத்தியில் இருந்து நேரடியாக சந்தைகள் அல்லது வீட்டு வாசலுக்கோ விற்பனைக்கு வரும் பொருட்களை மீன், கருவாடு, கால்நடை இறைச்சி என அனைத்தையும் அரசின் வரி கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து, இதனை தனியார் பெரும் நிறுவங்களிடம் தாரை வார்க்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள மாட்டிறைச்சிக்கான தடை.
கால் நடை வணிகத்தைனை முழுவதும் அரசு கட்டு பாட்டிற்குள் கொண்டு வருவது..
முழுமையாக இந்த தொழில் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் நிறுவனங்களின் பண்ணைகள் மட்டுமே நடத்த கூடியதாக மாற்றுவதற்காண துவக்கம் தான் இது.
இவை அனைத்தயும் உலக பொது வர்த்தக கழகத்தின் வழிகாட்டுதலில் நடந்திக் கொண்டிருகிறது இந்திய அரசு.
இதனை தொடர்ந்து மக்களிடம் பேசி வருவதால் தான் தோழர் திருமுருகன் காந்தி தினந்தோறும் ஒரு பொய் வழக்கில் கைது செய்யபடுகிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.