05/06/2017

இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஹெலிகாப்டர்... ராணுவம் எங்கே போனது...


இந்தியா - சீனா எல்லையை ஒட்டி உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பாராகோதி பகுதியில் இன்று சீன ஹெலிகாப்டர் பறந்து உள்ளது.

இது குறித்து சாமோலி போலீஸ் கண்காணிப்பாளர் திருப்தி பட் கூறுகையில்...

திபெத் பகுதியில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று இந்திய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது. பாராகோதி பகுதியில் சுமார் 4 நிமிடங்கள் ஹெலிகாப்டர் சுற்றி உள்ளது. எனினும், அது சீன ஹெலிகாப்டர்தானா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது என்றார்.

சாமோலி மற்றும் பிற பகுதிகளில் இந்திய வான் எல்லைப்பகுதிக்குள் சீன பகுதியில் இருந்து முந்தைய காலங்களிலும் அத்துமீறல் நடந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று அத்துமீறி வந்த ஹெலிகாப்டர் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர் இல்லை என்பதை திருப்தி பட் தெளிவுபடுத்தினார்.

எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஹெலிகாப்டர் வந்து உள்ளது அத்துமீறல். உள்ளூர் உளவுத்துறையும் அத்துமீறலை கண்டறிந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக  இந்தோ - திபெத் எல்லை காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது என்றும் திருப்தி பட் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.