06/06/2017

அழிந்து கொண்டு இருக்கும் நம் முன்னோர்கள்...


மலைகளில் வேட்டையாடி  மலையடி வாரத்தில் குருத்துக்களை பயிரிட்டு  உண்டு வாழ்ந்த மக்கள் தான் குறிஞ்சி நில மக்கள்..

இவர்கள் தான் குறவர்கள் என்று நாம் இன்று அழைக்கிறோம்..

இவர்களின் பாரம்பரியத்தில் ஒன்று தான் தேன்..

இன்றும் கூட தேன் தேவையெனில் இவர்களால் மட்டுமே சுத்தமான தேனை கண்டு பிடித்து எடுத்து தர முடியும்..

மட்டுமின்றி நீண்ட கம்புகளுடன் எவ்வித ஆயுதம் இன்றி கொக்கு மடையான் கீரிப்பிள்ளை போன்ற விலங்கினங்களை இலகுவாக வேட்டையாடி விடுவார்கள்...

ஆனால் இவர்களின் இன்றைய நிலை ஊசி மணி பாசி மணி விற்கும் நிலை பேருந்து நிலையத்தில் தமது பிள்ளைகளுடன் ஈ மொய்க்கும் இடத்தில் உறங்குவதும் வாழ்விடங்கள் இன்றி அலைந்து திரிவதுமாக இருக்கிறது இதற்க்கு  நாம் வெட்கப்பட வேண்டும்..

இன்றைய நவீனத்துவம் என்று போட்டி பொறாமை காலை  வாறிவிடுதல் போன்று இல்லாமல் கிடைக்கும் இடத்தில் உறங்குவதும்..

எந்த விதமான அரசாங்கதையும் நம்பாமலும் ஒரு சமூகம் வாழ்கிறது என்றால் அது இவர்கள் மட்டுமே..

படிப்பு என்பது இன்று வந்தது பாரம்பர்யம் என்பது என்றோ வந்தது.

குறவன் குறத்தி ஆட்டம் என்பதும் அவர்களின் ஆடை ஆபாசமாக ஆகியதும் நவீன உலகத்தின் தாக்கம் தான்..

குறவர்கள் இனம் மிகவும் மரியாதையான இனம்..

காட்டுப்பகுதியில் வாழக்கூடிய இவர்களுக்கு காட்டு விலங்குகளின் தன்மைகள் பற்றிய அறிவு அன்றைய காலத்தில் இருந்தது..

காட்டையும் விலங்கையும் நாம் அழித்து விட்டதால், அவர்கள் காட்டைவிட்டு வெளியேறி நவீன உலகில் வரும் பொழுது அவர்களின் நடத்தை அவர்களின் மொழிகள் நம்மவர்களுக்கு ஒரு இளக்காரம் ஆகியது..

தமது வயிற்று பசிக்கு வேறு வழியின்றி குறவன் குறத்தி ஆட்டத்தை ஆரம்பித்து அதிலும் ஆபாசமாக ஆடவேண்டும் என்ற கட்டளையின் படி உருவாக்கப்பட்டதே இந்த ஆட்டம்.

காமப்பசிக்கும் வயிற்று பசிக்கும் ஆளாக்கப்பட்ட இம்மக்கள் இன்று அழிந்து கொண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை..

இதில் கவனிக்கப்பட வேண்டிய இனம் நரிக்குறவர்கள் நரியை போன்று தந்திரம் வைத்து காட்டு விலங்குகளையும் நரிகளையும் வேட்டையாடுவதில் மிகவும் சிறந்து விளங்கினர்.

இவர்களது பூர்வீகம் மராட்டியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இவர்களது மொழி வாக்ரிபோலி என்றோரு மொழியை பேசுகின்றனர்..

இந்த இனத்தில் சில அழகான தனமைகள் உண்டு அதாவது திருமணம் ஆன பெண் இரவு அந்தி சாய்ந்ததும் எங்கிருந்தாலும் தினமும் தனது கணவனை சந்திக்க வேண்டும், அதாவது கணவன் அல்லாமல் வெளியே எங்கேயும் ஓர் இரவு தங்க கூடாது என்று அர்த்தம்..

கணவன் மனைவி பிரசனையாயின் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் விவகாரத்து முடித்தபின் சில மாதங்களில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்..

முக்கியமாக இவர்களிடம் திருட்டு விபசாரம் அறவே கிடையாது. இன்றைய நவீனயுகத்தில் பணம் இல்லாமல் அவதிப்பட்டாலும் மானத்தை இழந்து வாழாத ஒரு இனம் இவர்கள் மட்டுமே..

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவர்கள் நாடோடிகளாக இருப்பதற்கு சீதா தேவியின் சாபம் என்று இராமாயணத்தில் கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது..

சீதா தேவியின் அழகை இவர்கள் கிண்டல் செய்தார்களாம் அதனால் சீதா இந்த மக்களுக்கு சாபம் விட்டால் என்று கிறுக்கி வைத்துள்ளார்கள்.

உண்மை என்னவெனில் இவர்கள் நாளையை பற்றி கவலை இல்லாதவர்கள் அதனால் எதையும் சேமித்தது வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள்..

இதற்க்கு மறைமுகமான காரணம் ஒன்றும் உள்ளது..

இவர்களை பொறுத்தவரையில் அன்றைய காலத்தில் ஹிந்து மதத்தை நம்பாதவர்கள் ஏறக்குறைய எந்த மத கடவுளையும் அவர்கள் கும்பிடாதவர்கள்..

அதனால் தான் இவர்கள் கோவில் கூட காட்டுவதில்லை.. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று எந்த குருக்களிடமும் சென்று காத்திருக்க மாட்டார்கள்..

அதே போன்று இன்னும் சில மலையடிவாரத்தில் தங்களது தோட்டம் தங்கள் மக்கள் சகிதம் குடிசை அமைத்து இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள்..

இவர்கள் சம்பந்தமாக நிறைய இட்டுக்கட்டப்பட்ட வரலாற்று கதைகள் உண்டு அதற்க்கு எல்லாவற்றுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாதவைகள்..

அதில் ஒன்று நரிக்குறவர்கள் மராட்டிய மன்னன் சிவாசியின் படையில் இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு இவர்களே உதவினார்கள் என்றெல்லாம் இவர்களது வரலாற்றை சிதைத்துள்ளார்கள்..

எல்லாவற்றையும் அழித்து கெடுத்தது நவீன யுக படிப்பு..

பாரம்பரியத்தை அழித்து தான் படிப்பை காக்க வேண்டுமெனில் அந்த படிப்பு தேவையில்லை என்பதே சிறப்பு..

இனி எங்கேனும் குறிஞ்சி இனமக்களை [குறவர்கள்] கண்டால் அன்போடு பேசி அவர்கள் வைத்து இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்..

எம் முன்னோர்களில் ஒரு பிரிவினர்
என்று நினையுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.