நான் இதற்கு முன்னர் குமரிகணடத்தை
பற்றி கூறி இருந்தேன். பலர் இதை கற்பனை என்று குற்றம் சாட்டினர் ஆக அதை நிருபிக்கும் பொறுப்பு உள்ளது.
நாம் இதுவரை அங்கோர்வாட் உள்ளடங்கிய தென்கிழக்காசிய குமர் நாகரீகம், ஈரான், காஷ்மீர் உள்ளடங்கிய சுமேரிய நாகரீகம், மெசொபடோமிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், மாயன் மற்றும் இன்கா நாகரீகங்களைப்பற்றி
பார்த்துள்ளோம்.
இனி இவை எல்லாவற்றுக்கும் மூலமும் தொடக்கமுமாய் இருந்த தமிழரின் பூர்வீகம் பற்றித் தேடுவோம்.
எந்தச்சூழ்நிலையிலும் இந்தக்கட்டுரைகள், தமிழரின் பழம்பெருமை பேசி நிகழ் காலத்தை மறக்கச்செய்யவோ, வீண் பெருமை அரிப்புக்குத் தீனி போடுவதோ அல்ல.
உலகின் எல்லா இனங்களும் தங்களது வரலாற்றை மறக்காதவை, அவற்றை பாதுகாப்பவை, தமிழினம் தவிர.
தமிழினம் மட்டுமே தன் அழிவில் பெருமை கொள்கிறது. எனக்குத் டமில் வராது என தமிங்கிலம் பேசுவதை ஒரு இயல்பான பரிணாமமாக கருதுவது ஒரு குழு. தாய் மொழி தெரியாததை பெருமையோடு அறிக்கையிடும் கேவலம் எனக்குத்தெரிந்து தமிழர்களிடம்(?) தான் இருக்கு. மொழி என்பது தொடர்புகொள்ள ஒரு வழி தானே எதுவாயிருந்தால் என்ன என இன்னொரு குழு. தமிழில் பேசினாலே தீவிரவாதியாய் பார்ப்பது இன்னொரு குழு, தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழருக்கெதிராய் பேசும் குழுக்கள் இன்னொரு பக்கம்.
தமிழரின் வரலாற்றை மறைத்து திரித்து அழித்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வந்திருக்கும் ஆரியக்கூட்டம், இன்றும் கூட பூம்புகார் கடலாய்வு நடத்தி பாதியில் மூடியது,
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை முடிந்து பல வருடங்கள் ஆன பின்னும் இன்னும் வெளியிடாமல் மறைப்பது,
சிந்துவெளி, துவாரகை ஆய்வு முடிவுகள் தமிழருடையதா, ஆரியருடயதா என்ற கேள்விக்கு மழுப்பலாக அது இந்தியருடையது என்ற முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. சொல்வது,
அதே கதைதான் கீழடிக்கும்....
என தன் முகத்தை தெளிவாகவே காட்டுகிறது..
இதற்கு சரியான பதிலை, வரலாற்றுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய தமிழன் எப்படி இருக்கிறான்?
டாஸ்மாக் தமிழன், ரசிகர் மன்றத் தமிழன், கடலைத்தமிழன், எதையும் கலாய்க்கும் தமிழன், வெட்டிபேச்சு பேசியே காலம்போக்கும் தமிழன், தமிழ், தமிழனுக்கெதிராகவே பேசித்திரியும் எட்டப்பத்தமிழன், சாதியத்தமிழன், தமிங்கிலத்தமிழன், 9-5 அலுவல் தமிழன், இந்தியத்தமிழன், இவர்களை மறைமுக ஆரியக்கூட்டம் எனலாம்.
அவர்கள் அங்கிருந்து செய்ய வேண்டிய வேலையை, உள்ளிருந்தே செய்பவர்கள் (பல நேரங்களில் அறியாமலேயே).
பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழர்கள் கட்டிக்காத்த பாரம்பரியம், ஆயிரக்கணக்கில் சித்தர்களும், அறிஞர்களும், கணியர்களும் உருவாக்கிய, வானியல், இலக்கியம், மருத்துவம், கட்டடக்கலை, விவசாயம், மற்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சா. சேகரித்த ஓலைச்சுவடிகள், பாவாணர் கண்டுபிடித்த வேர்ச்சொல் விளக்கவுரைகள் இன்னும் பிற வீனாகப் போய்விடக்கூடாதல்லவா.
தமிழர் வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாய் அல்ல, அறிவியல் பூர்வமாய் அணுகுவோம். உண்மை எது என்பதைத் தேடிக் கண்டு பிடிப்போம். தெரிந்த உண்மையை பகிர்வோம், அறிவிப்போம், அதன் மூலம் தமிழரின் சுயமரியாதையை, தன்னம்பிக்கையை மீட்போம். தமிழால் பன்னெடுங்காலமாய் முடிந்தது, இன்றும் முடியும், தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழி வேலைவாய்ப்பு, தமிழ்வழி அரசாங்கம், தமிழ்வழி தமிழர் மேம்பாடு என ஆங்காங்கே சிறு சிறு முயற்சிகளாய்.
அந்த வகையில் மிகச்சிறிய ஓர் அறிவியல்பூர்வ ஆய்வுத் தேடல் முயற்சிதான் இது.
குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா? தொடரும் பாகங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.