22/07/2017

குமரிக்கண்டம் உண்மையா - 2..?




1) கடல் அகழ்வாய்வில் குமரி நாடு:
 தெற்கே இந்தியப்பெருங்கடலில் (அதிகபட்ச ஆழம் (Sunda Trench) சுண்டா படுகுழி 8 கி. மீ. அல்லது 7,725 மீட்டர், சராசரி ஆழம் 4 கி. மீ.) உள்ள நீரையெல்லாம் அகற்றினால், (உடனே மத்த கடலேருந்து தண்ணீ வந்துரும்னு சொல்லாதீங்க) தரை எப்படி இருக்கும். குமரிக்கண்டம்னு சொல்லப்படும் பகுதி எவ்வளவு பெருசா இருக்கும். அதையும்தான் பார்க்கலாமே. கடல் நீர் அகற்றப்பட்ட இந்தியப்பெருங்கடல் தரை. இந்தியப்பெருங்கடலின் சராசரி ஆழம் 4 கி. மீ. ஆக இருந்தாலும் பல இடங்களில் 2 கி.மீ. க்கும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரியை ஒட்டி 300 கி. மீ. தூரம் வரை கடலின் ஆழம் அரை கி. மீ. தான்.

இந்தப்பகுதியில் குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் பகுதியில் எத்தனை தமிழ் நாடுகள் இருந்தன என்றால் மொத்தம் 49 நாடுகள்:

1. ஏழ்தெங்க நாடு,
2. ஏழ்மதுரை நாடு,
3. ஏழ்குணகாரை நாடு,
4. ஏழ்பின்பாலை நாடு,
5. ஏழ்குன்றநாடு,
6. ஏழ் முன்பாலை நாடு,
7. ஏழ்குறும்பனை நாடு

இவை ஒன்றும் அறிவியல் தன்மை அற்றது அல்ல.

ஏழ்குணகாரை நாடு - கரை என்பதால் கீழக்குக்கடல் பகுதியில் இவை இருந்திருக்கும்.

ஏழ் குன்ற நாடு - குன்றம் என்பது மலையை சுற்றியுள்ள நாடுகள். குமரியில் மேரு என்றதொரு மலை இருந்ததை ஒப்பிட்டுப் பார்க்க.

இந்தியப்பெருங்கடலுக்குள் இரு பெரும் மலைத்தொடர்கள் இருப்பதைப்படத்தில் காணலாம்.

இந்த மலைத்தொடரில் எப்படி நாடுகள் இருந்திருக்கும் என்று நம்பாதவர்களுக்கு,

படத்தில் உள்ள மேற்குப்புற மலைத்தொடரில் தான், நம்ம ஊரு லட்ச தீவுகள், மினிகாய் தீவுகள், மாலைத்தீவு என்று தமிழ்ப்பெயரிலேயே உள்ள தீவுக்கூட்டம், அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படை கொண்ட டியூகோ கார்சிகா தீவு என இத்தனை நாடுகளும் உண்டு.  

தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 66 மீட்டர். ஜப்பானின் சுனாமி உயரம் அதிகபட்சம் 3 மீட்டர். கி. மு. 10,000 ல் ஏற்பட்ட கடல் கோளின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்தது 120 மீட்டர். 1 அல்லது 2 முறை அல்ல, 3 முறை (500 மீட்டர்). கடல் மட்டம் 400 அடி (120 மீட்டர்) உயர்ந்த பின்னும் மேற்சொன்ன தீவு நாடுகள் இங்கு இருக்கிறது என்றால், 120 மீட்டர் குறைந்தால் எவ்வளவு பெரிய நாடுகள் கிடைக்கும்.

மாலைத்தீவுகளை செய்மதியிலிருந்து (satellite) எடுத்த புகைப்படத்தில் காணலாம்.
ஏழ் மதுர நாடுகள் - தென்மதுரை குமரியின் கடைத் தலைநகரம் என்பதால் இந்நகர் சுற்றி அமைந்த நாடுகள் இவை.

ஏழ்தெங்க நாடு - தென்னை மரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

ஏழ் குறும்பனை நாடு - மேற்சொன்ன தென்னை போலவே பனையும் தென்னகத்திலே அதிகம். ஏழ் பனை நாடு யாழ்ப்பானத்தைக் குறிக்கும்,

பனை மரம் தெற்கத்திய நாடுகளின் மரம்.

தெற்கே செல்லச்செல்ல எண்ணிக்கை அதிகரிப்பதாக விக்கிபீடியா சொல்கிறது.

"கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே."

குணகரை தெங்க பனை இவை எல்லாம் திசை குறித்திருக்க, பாலை நாடுகள் மட்டும் முன் பின் எனக்கூறுவானேன். அவற்றையும் குணப்பாலை குடப்பாலை தென்பாலை வடபாலை அல்லது நடுப்பாலை என கூறாமல் விட்டதன் அர்த்தம் என்ன?

இங்கு தான் நாம் இக்குமரி நில நடுக்கோடு தாண்டி பரந்திருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"

ஆக இங்கு முன் பின் பாலை நாடுகள் எனக்கூறியது.

சூரியனின் மகர ரேகை பயண காலத்தில் ஒரு ஏழு  நாடுகள் வறட்சி கண்டு அவை முன்பாலை எனவும்,

சூரியனின் கடக ரேகை பயண காலத்தில் மற்றொரு ஏழு நாடுகள் வறட்சி கண்டு அவை பின்பாலை எனவும் கூறப்பட்டிருக்கலாம், கீழே உள்ள உலக உருண்டையில் காணப்படுவது போல.

குமரி முனைக்குத் தெற்கே 5,300 கி.மீ. தொலைவில் பிரான்ஸ் நாடு எடுத்துக்கொண்ட ஆம்ஸ்டர்டம் தீவில் (மேலே உலக உருண்டையில் குறியீடு காட்டும் தீவு) நடத்தப்படும் ஆராய்ச்சி, தொல் தமிழர் தொடர்பான மேலும் பல தகவல்கள் தரும்..

அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.