09/07/2017

இந்தியா போன்ற பல தேசிய இன நாட்டில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன விடுதலையை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகாதா ?


பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற தொடர், அனைத்துத் தேசங்களின் ஒற்றுமை என்பதைத்தான் குறிக்கிறது.

தேசங்களற்ற உலக ஒற்றுமையை அது குறிப்பிடவில்லை.

தனது சொந்த தேச அரசை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடும் ஆற்றலற்றது என்றார் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்னுரை).

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.

ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின்.

அந்த உரிமையைத் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) என்றார்.

ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ( Right to Self determination with the right to secede ) வழங்கினார்.

விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம். விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.

பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுதான் நடத்த வேண்டும். பட்டப்படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக்கூடாது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.