09/07/2017

பரதமும் இரகசியமும்...


இந்த மன்னர் குடும்பம் தனக்கான இயங்கியலாக தேனியின் இயங்கியலை தான் வைத்திருக்கிறது... என்பது நாம் முன்பே கண்டவிசயம் ஆகும்...

இதில் ஒரு சிறு விளக்கம்...

தேனிகளில் வெளியே தேன்சேகரிக்க போகும் தேனிகளில் ஒரு பிரிவு  அதன் உளவு வேலையை முடித்துவிட்டு வந்த உடன் ஒருவித நடனத்தை ஆடுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்தனர்.

அந்த நடனம் ஒருவித நளினத்துடன் இருக்கிறது இது உடல்உறவுக்கான அழைப்பு (Sex dance) என்று கூறினர்.

ஆனால் ஆஸ்திரிய நாட்டு ஆய்வாளர் Karl von Frisch தான் இது உடல் உறவுக்கான அழைப்பு அல்ல இது உளவு பார்த்து வந்த தேனிகள் தேன் இருக்கும் இடத்தையும் அங்கே இருக்கும் ஆபத்துகளையும் ஒரு சில அடையாளத்துடன் கடத்துகிறது என பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தினார்...

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது...

அதே  போல தான் இந்த மன்னர் குடும்பத்தின் உளவு பிரிவின் பெண்கள் தங்கள் பரத நடனத்தின் மூலம் ஒரு சில விடயங்களை சூசகமாக கடத்தினார்கள்...

எந்த பரத நாட்டியமும் கிராமமக்களிடம் நடத்தப்படவில்லை அனைத்துமே கோவில்களுக்கு உள்ளே தான் நடத்தப்பட்டது.

உளவு பிரிவில் பெண்களை பயண்படுத்திய இந்த மன்னர் குடும்ப இயங்கியல் தான் உலகத்தின் மிக நேர்த்தியான மற்றும் மறைவான உளவு அமைப்பாகும்...

ஆனால் இன்றோ  இது தமிழர்களின் கலை என ஒருசிலர் சொல்லிவருவது தான் வேதனை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.