28/07/2017

வடகொரியா அறிவிப்பு: அமெரிக்காவின் தடை குறித்து கவலை இல்லை...


அமெரிக்கர்கள் வடகொரியாவுக்கு வருவதற்கு அந்நாடு விதித்துள்ள தடை குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்தத் தடை குறித்து வடகொரியா கூறியபோது, ”அமெரிக்காவின் இந்தத் தடையால் வடகொரியாவின் சுற்றுலா துறைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அமெரிக்காவின் தடை குறித்து எங்களுக்கு கவலையும் இல்லை" என்று கூறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது. இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வார்ம்பியயரின் மூளை திசுக்களில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர் செயல்படாத நிலை ஏற்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமானதைத் தொடர்ந்து வார்ம்பியர் கடந்த மாதம் வடகொரியாவிலிருந்து அமெரிக்கா அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் வார்ம்பியர் மரண மடைந்தார். இதனைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு தங்கள் குடிமக்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.