28/07/2017

பாஜக சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தே.ஜ கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளி்க்காமல் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா மவுனம் காப்பது ஏன்?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது...


துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவர் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது...

வெங்கையா நாயுடுவின் மகளின் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டது போன்ற கட்டண விலக்கு சலுகை, நூற்றுக்கணக்கான பிற அறக்கட்டளைகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை?

வெங்கையா நாயுடுவின் மகன் நிறுவனத்தில் வாங்கப்பட்ட கார்களுக்கும், பிற டீலரிடம் டெண்டர் மூலம் வாங்கப்பட்ட கார்களுக்கும் உள்ள விலை வித்தியாசம் எவ்வளவு?

ஊழல் மற்றும் முறைகேடுகளை துளியும் பொருத்துக் கொள்ள மாட்டேன், பொதுவாழ்வில் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவை கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி கூறுகிறார்.

ஆனால், காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பா.ஜ தலைவர் அமித்ஷா திருப்தியான பதில் அளிக்க தவறிவிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய மக்கள் பதில் கேட்கிறார்கள்.

இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, வெங்கையா நாயுடு வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு சுர்ஜிவாலா கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.