ஆக்ஸிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறக்கவில்லை, மூளை வீக்கத்தால் குழந்தைகள் இறந்து விட்டார்கள் என பொய் சொல்லும் இவர்களின் மூளை வீக்கத்திற்கு யார் சிகிச்சை அளிப்பது?
மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணும் படி ஒரு திட்டத்தை கூட கொண்டுவராத இவர்கள் செய்த மூன்றே சாதனைகள்:
1) கேஸ் மானியத்தையும், ரேஷன் கார்டையும் ஒழித்தது.
2) மாட்டிறைச்சியை தடை செய்தது, மாட்டு மூத்திரத்தை குடிக்க சொன்னது.
3) பிட்டு படம் ஓடும் தியேட்டரில் கூட, தேசிய கீதம் ஒளிபரப்ப சொல்லி தேச பக்தியை வளர்த்தது.
மக்கள் செத்தால் பரவாயில்லை, மாடு இறந்தால் மனம் தாங்காது... எதிர்த்து பேசினால், தேச துரோகம்... வீதியில் இறங்கி போராடினால், குண்டர் சட்டம்.
இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று நாட்டை சுத்தம் செய்யவும் ‘ஸ்வச் பாரத்’ என்கிற பெயரில் மக்களிடமே வரி வசூல் செய்யப்படும், ஆனால் கடைசி வரை ஒரு பஸ் ஸ்டாண்ட் கக்கூஸை கூட சுத்தம் செய்ய வக்கில்லாமல் 3 வருடம் கழித்து அந்த ‘ஸ்வச் பாரத்’ திட்டமே சத்தமில்லாமல் ஒழிக்கப்படும்.
நான் கட்டிய வரிப் பணமெல்லாம் என்னாச்சு என கேட்டால், நான் சமூக விரோதி.
நாட்டு மக்களின் எந்த பிரச்சினைகளுக்கும் வழி காணாமல், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வாரம் ஒரு ஃபாரின் டூர் போவதும் ‘இந்தியாவை உலகிலேயே சிறந்த நாடாக்குவேன்’ என தொடர்ந்து பேச்சில் மட்டும் கோட்டை கட்டுவதும் யாருக்கு என்ன பலனளிக்க போகிறது?
500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த பொழுது வங்கி வாசலிலும் ஏடி்எம் வாசலிலும் நாள் முழுக்க வரிசையில் நின்று நாடு முழுக்க இறந்த 165 பேரின் சாவுக்கும், வட மாநிலங்கள் முழுக்க தூண்டிவிடப்படும் மதவாத வன்முறை, சாதிய வன்முறை, மாட்டை காக்க செய்யும் வன்முறையிலான மரணங்கள், இன்று கோரக்பூரில் இறந்த 70 குழந்தைகளின் மரணங்கள் – இதுக்கெல்லாம் எவன்தான்டா பொறுப்பு?
இது எதுவுமே நடக்காததைப் போல, நாளை மறுநாள் சுதந்திர திருநாளன்று சிரித்துக் கொண்டே வாழ்த்து தெரிவிப்பார் நம் ஒப்பிலா பாரத பிரதமர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.