15/08/2017

எங்கே சுதந்திரம்?


இந்த
தேசத்திற்கு
சுதந்திர தினம் ஒரு கேடா

சுடுகாட்டு மேலே
தேசிய கொடி ஏற்றுங்கள்
ஒப்பாரியே தேசிய கீதம்
என பாடுங்கள்

மாடுகளை
அழைத்து மிட்டாய் கொடுங்கள்
கன்றுகளை வைத்து
கலை நிகழ்ச்சி
நடத்துங்கள்

பசுமையான
பாரதத்தை எதிர்ப்பார்த்தோம் -ஆனால்
பசுக்கான பாரதமாகவே மாறி வருகிறது
வலிமையான
பாரதத்தை எதிர்ப்பார்தோம் -ஆனால்
வஞ்சகம் நிறைந்த
பாரதகமாகவே மாறு வருகிறது

ஆனாலும்
நாளை தேசியக்கொடி ஏற்றப்படும்
சன கன மன கதி பாடப்படும்
சனங்களின் ஒப்பாரி மழுங்கடிக்கப்படும்
பாரத மாதாவுக்கு ஜே
என்னும் குரலில்
பச்சிளம் குழந்தைகளின்
மரணம் புதைக்கப்படும்

வழக்கம் போல்
வழக்கு நீதி மன்றம் போகும்
வழக்கம் போல்
குற்றவாளிகள் நிரபராதி ஆவார்கள்
மீண்டும்
ஒரு படுகொலை நடக்கும்
ஆனாலும்
தேசியக்கொடியும், தேசியக் கீதமும்
ஒளித்துக் கொண்டே இருக்கும்
சுதந்திரமாக..

புரட்சி கவிஞன்
செ.அ நிலா பிரியன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.