02/08/2017

ரேஷன் பொருட்கள் கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டது குறித்து...


நிர்மலா சீதாராமன் : விறகுக்கு GST போடாதவரை சந்தோசப்பட்டுக்கோங்க.

தமிழிசை : மத்திய அரசு எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கும் மனப்பான்மையை கைவிடுங்கள். உன்னதமான இந்த திட்டத்தை ஏழைகள் பாரமாக பார்க்கத்தேவையில்லை. நம் பாரத நாட்டின் வளர்ச்சிக்காக அம்பானிக்கும் அதானிக்கும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இல கணேசன் : மேல் வகுப்பினர் வாழ்வதற்கு நடுத்தர ஏழை மக்களை பலி கொடுப்பது தவறில்லை என்று மநுதர்மமே கூறுகிறது.

எடுபிடி : இதை எதிர்த்து யாராவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

ஹெச் ராஜா : நான் இல்லேங்குறேன். தேச விரோதிகள் பொய்த் தகவலை பரப்புகிறார்கள். 'தே ஆர் யேண்டி நேஷனல்ஸ்'.

டாகடர் கிருஷ்ணசாமி : எங்களுக்கு கேஸ் மானியம் வேண்டாம் என அமித் ஷா வந்த போதே தெரிவித்துவிட்டேன். மீதம் இருக்கும் ரேஷன் கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய போகிறேன்.

ஸ்டாலின் : இந்த அறிவிப்பால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். மார்ச் மாதத்தில் அமலுக்கு வருவதாக இருக்கும் இந்த திட்டத்தை அடுத்த ஜூன் மாதத்திலிருந்து செயல்படுத்த பினாமி மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

சுபவீ : 2018 ஏப்ரல் 1ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவித்த 'கேஸ் மானியம் ரத்து' எதிர்ப்பு போராளி தளபதி ஸ்டாலின் வாழ்க வாழ்க வாழ்கவே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.