செய்யாறு புளியங்குள கலவரத்தில் பா.ம.க தலைமைகள் ஒதுங்கிக் கொண்டது மகிழ்ச்சி...
திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் விடுதலை சிறுத்தைகள் நடத்தியது தான் செய்யாறு கலவரம்.
வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் இருப்பது என்ற தவிப்பில் இருந்தது விடுதலை சிறுத்தைகள். எல்லா பக்கமும் முயன்று பார்த்தாகி விட்டது. தனி ஒரு அணி கட்டியும் பார்த்தாகி விட்டது. எதுவும் வேலைக்கு ஆகவில்லை. திமுக தான் இனி என்ற இருந்த நிலையில் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகளை சந்தேகக் கண்ணோடு தான் பார்த்தார். நாம் ஒரு அணியாக இருந்து போராட்டங்கள் நடத்தலாம், ஆனால் தேர்தல் கூட்டணி வேண்டாம்' என்று ஸ்டாலின் திருமாவளவனிடம் திட்டவட்டமாக சொல்லி விட்டார். திருமாவளவனுக்கு திக்கென்று ஆகி விட்டது '
''இல்லை, நான் உங்களோடு கூட்டணி சேர விரும்புகிறேன் என்று திருமாவளவன் கெஞ்சி பார்த்தார். ஸ்டாலின் முடியவே முடியாது என்று சொல்லி விட்டார். 'ஸ்டாலினும் ஜெயலலிதாவைப் போன்றவர்' , ' திமுகவைத் தாண்டி ஸ்டாலின் மக்கள் அபிமானத்தைப் பெறவில்லை 'என்றெல்லாம் சமீப காலம் வரையில் திருமாவளவன் தனக்கு எதிராக அளித்த பேட்டிகளை ஸ்டாலின் மறந்திருக்கவில்லை.
இந்த நிலையில் வேறு வழியே இல்லாத திருமாவளவன், 'என் விசுவாசத்தை நிரூபிக்க நான் என்னதான் செய்யவேண்டும் சொல்லுங்கள் ' என்று கேட்க, 'ஒரு கலவரம், சாதிய கலவரம், பாமகவை சிக்க வைக்கும் வகையில், பாமகவின் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு கலவரம். செய்து காட்டினால் உங்களை நாங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்வோம் ' என்று சொல்ல, அதன் பேரில் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க நிகழ்த்தப்பட்டது தான் செய்யாறு கலவரம். '
விசுவாசம் வென்றது. இப்போது 'திமுக ஆட்சியைப் பிடிக்க திருமாவளவன் பக்கபலமாய் இருக்க வேண்டும்' என்று ஸ்டாலின் உருக , 'திமுகவுக்கு நாங்கள் பக்க பலமாக என்றும் இருப்போம்' என்று திருமாவளவன் மருகினார்.
பாமகவுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் அந்தக் கலவரத்தில் இருந்து நைச்சியமாக ஒதுங்கிக் கொண்டார்கள். அதே நேரம் இந்த கலவரம் தொடர்பான விவரங்களை சேர்த்து விட்டார்கள். விரைவில் நீதிமன்றத்தை நாடுவார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.